ஸ்ரீநகர் உணவகத்தில் ராகுல் -
இந்தியா

ஸ்ரீநகரின் பிரபல உணவகத்துக்குச் சென்ற ராகுல்! புகைப்படங்கள்!

ஸ்ரீநகரின் பிரபல உணவகத்திற்கு சென்ற ராகுல் காஷ்மீரின் பாரம்பரிய உணவான வாஸ்வானை சுவைத்தார்.

IANS

காஷ்மீரின் ஸ்ரீநகரில் முகாமிட்டுள்ள மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி அங்குள்ள பிரபல உணவகத்துக்குச் சென்று பராம்பரிய உணவுகளைச் சுவைத்துள்ளார்.

ஜம்மு-காஷ்மீரில் பேரவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டிருக்கும் நிலையில், காங்கிரஸ் தேர்தலை எதிர்கொள்ள ஆயத்தமாகி வருகிறது. குறிப்பாகக் கூட்டணியை வலுப்படுத்தும் விதமாக ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் இரண்டு நாள் பயணமாக நேற்று மாலை ஸ்ரீநகர் வந்தடைந்தனர்.

வியாழக்கிழமையான இன்று கூட்டணிக் கட்சிகளின் தலைவர்களைச் சந்திந்து கூட்டணியை இறுதி செய்ய உள்ளனர்.

உணவகத்தில், ராகுலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்டவர்கள்

இந்த நிலையில், நேற்று மாலை ஸ்ரீநகரில் உள்ள பிரபல அஹ்தூஸ் உணவகத்திற்குச் சென்றார். அங்கு வாடிக்கையாளர்களுடன் சென்று சாதாரணமாக அமர்ந்து அங்கிருந்தவர்களை ஆச்சரியப்படுத்தியுள்ளார்.

அந்த உணவகத்தில் ராகுல் காந்தி பாரம்பரிய காஷ்மீரி அசைவ உணவுகளான வாஸ்வான் டிராமியை ஆர்டர் செய்தார். அதில் மீத்தி மாஸ், தபக் மாஸ், கபாப் மற்றும் சிக்கன் போன்ற பாரம்பரிய உணவுகள் இருந்தன. பின்னர் அவருக்கு ரிஷ்டா ரோகன் ஜோஷ் மற்றும் இறுதியாக கோஸ்டபா வழங்கப்பட்டது.

ஸ்ரீநகர் உணவகத்தில் ராகுலுடன் புகைப்படம் எடுத்துக்கொண்ட குடும்பத்தினர்

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவும் அவருடன் இருந்தார். அவர் சைவ உணவுகளை எடுத்துக்கொண்டதாக உணவக மேலாளர் தெரிவித்தார்.

உணவகத்திலிருந்த பலர் ராகுல் காந்தியுடன் புகைப்படங்களை எடுத்துக்கொண்டனர். மேலும் சிலர் உணவகத்தில் நிகழ்ந்தவற்றை தங்கள் செல்போனில் பதிவு செய்தனர். மேலும் ராகுல் அங்குள்ள எரினா ஐஸ்கிரீம் நிலையத்துக்குச் சென்று ஐஸ்கிரீம் சாப்பிட்டார்.

உணவகத்திற்கு வந்திருந்தவர்கள்

தேர்தல் நெருங்கியுள்ள நிலையில் இரு கட்சிகளுக்கு இடையேயான கூட்டணி குறித்து இரு தலைவர்களும் தேசிய மாநாட்டுத் தலைவர் டாக்டர் பரூக் அப்துல்லாவைச் சந்திக்க உள்ளனர்.

பின்னர் கட்சி தொண்டர்களிடம் காந்தி பேசுகிறார். பின்னர் செய்தியாளர்களுடன் சந்திப்பு நடத்துகிறார். பின்னர், விமானம் மூலம் ஜம்மு செல்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

உணவகத்தில் ராகுலுடன் பெண்கள்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தமிழறிஞா் சீகன்பால்கு நினைவு மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டு விழா

தங்கம் வெல்லும் வாய்ப்பை சீனாவிடம் நழுவவிட்ட இந்தியா! சாத்விக், சிராக் இணைக்கு வெண்கலம்!

இதற்காக ஒரு மாதத்துக்கும் மேலாக காத்திருந்தோம்; இலங்கை தொடருக்கு முன்பாக ஹர்மன்பிரீத் உற்சாகம்!

மதச்சார்பின்மை சொல்லைக் கேட்டாலே வேப்பங்காயாக கசக்கிறது பாஜகவுக்கு: முதல்வர் ஸ்டாலின்

வட மாநிலங்களில் காற்று மாசு: மலைப் பிரதேசங்களுக்குப் படையெடுத்த சுற்றுலாப் பயணிகள்!

SCROLL FOR NEXT