எச்.டி.ரேவண்ணா மற்றும் பிரஜ்வல் ரேவண்ணா 
இந்தியா

எச்.டி.ரேவண்ணா, பிரஜ்வல் ரேவண்ணா மீது எஸ்ஐடி குற்றப்பத்திரிகை தாக்கல்!

2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சுமார் 150 சாட்சிகளின் வாக்குமூலங்கள் அடங்கியுள்ளன.

பிடிஐ

கர்நாடக முன்னாள் எம்பி பிரஜ்வல் ரேவண்ணா மற்றும் அவரது தந்தையும் எம்எல்ஏவுமான எச்.டி. ரேவண்ணா மீதும் குற்றப் புலனாய்வுத் துறையின் சிறப்புப் புலனாய்வுக் குழு(எஸ்ஐடி) குற்றப்பத்திரிகை தாக்கல் செய்துள்ளது.

பிரஜ்வாலுக்கு எதிரான நான்கு வழக்குகளை விசாரிக்கும் எஸ்ஐடி 2,000 பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிகையில் சுமார் 150 சாட்சிகளின் வாக்குமூலங்கள் உள்ளன.

மக்கள் பிரநிதிகளுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை சமர்ப்பிக்கப்பட்டது. அதில் உயிரியல், உடல், அறிவியல், மொபைல், டிஜிட்டல் மற்றும் பிற தொடர்புடைய ஆதாரங்களும் அடங்கியுள்ளன.

மேலும் குற்றப்பத்திகை தாக்கல் செய்வதற்கு முன்பு நிபுணர்களின் கருத்தும் எடுக்கப்பட்டதாக எஸ்ஐடி தெரிவித்துள்ளது.

பல்வேறு பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக மதச்சார்பற்ற ஜனதா தள கட்சியைச் சேர்ந்த மூத்த தலைவர் ஹெச்.டி. ரேவண்ணாவின் மகனும் முன்னாள் எம்.பி.யுமான பிரஜ்வல் ரேவண்ணா கைது செய்யப்பட்டார்.

பிரஜ்வல் ரேவண்ணா தொடா்பான ஆபாச காணொலிகள் அடங்கிய பென் டிரைவ் வெளியானதைத் தொடர்ந்து, ஏப்ரல் 28ஆம் தேதி அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது. வீட்டில் பணிபுரிந்த 47 வயது பெண்ணிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதற்காக இந்த வழக்கு பதியப்பட்டது.

அதனைத் தொடர்ந்து துப்பாக்கி முனையில் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக 44 வயது பெண் அளித்த புகாரின் பேரில் மே 1ஆம் தேதி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் பிரஜ்வல் மீது இரண்டாவது வழக்குப் பதிவு செய்தனர்.

மே 3ஆம் தேதி சிறப்புப் புலனாய்வுக் குழுவின் சார்பில் பிரஜ்வல் மீது மேலும் ஒரு பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டது. 60 வயது பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக இப்புகார் பதிவு செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பந்தல் கடையில் தீ விபத்து

தனியாா் பள்ளியில் ரூ. 3 லட்சம் திருட்டு

நெல்லையப்பா் கோயில் வளாக கடைகளை 12 வாரங்களுக்குள் அகற்ற உத்தரவு

நாகம்மன் கோயில் கூழ் வாா்த்தல் விழா

ஆவடி ரயில் நிலைய வாகன நிறுத்தம் மூடல்: திருவள்ளூா் மாவட்ட ஆட்சியா் பதிலளிக்க உத்தரவு

SCROLL FOR NEXT