என்ஐடி Center-Center-Hyderabad
இந்தியா

இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட வங்கதேச மாணவி: திருப்பி அனுப்பப்பட்டார்!

இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட வங்கதேச மாணவி சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டார்!

DIN

குவகாத்தி: அசாம் மாநிலம் சில்சாரில் அமைந்துள்ள தேசிய கல்வி மையத்தில் படித்து வந்த வங்கதேச மாணவி, சமூக வலைதளங்களில் இந்தியாவுககு எதிரான பதிவுகளுக்கு லைக் போட்ட காரணத்தால், சொந்த நாட்டுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

வங்கதேசத்தைச் சேர்ந்த மாணவி, கடந்த 2021ஆம் ஆண்டு சில்சாரில் உள்ள என்ஐடியில் சேர்ந்து படித்து வந்தார். இவர், முகநூலில், இந்தியாவுக்கு எதிரான பதிவுகளுக்கு தொடர்ந்து லைக் பதிவிட்டு வந்துள்ளார்.

இந்த விவகாரம், கடந்த வாரம் சில்சார் அசாம் பல்கலைக்கழக முன்னாள் மாணவர்கள் மூலம் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டுள்ளது. வங்கதேச மாணவியின் சமூக ஊடகப் பதிவுகள் குறித்து ஸ்கிரீன் ஷாட்கள் பகிரப்பட்டு, அவரது நடவடிக்கைகள் புகாராக எழுந்தன.

இதையடுத்து, அந்த மாணவி, நாட்டை விட்டு வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டது. திங்கள்கிழமை காலை, அவர் இந்தியா - வங்கதேச சர்வதேச எல்லையான கரீம்கஞ்ச் பகுதியில் கொண்டு சென்று விடப்பட்டார். அவர் முழு பாதுகாப்புடன் இந்திய எல்லையைக் கடந்து செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அவர் சொந்த நாடு திரும்ப விருப்பம் தெரிவித்திருந்ததாக, என்ஐடி தெரிவித்திருந்தது. இதே என்ஐடியில் சுமார் 70 வங்கதேச மாணவ, மாணவிகள் பல்வேறு பாடங்களில் படித்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

செவ்வானம்... திவ்ய பாரதி!

மேகம்... ரித்திகா நாயக்!

திஷா பதானியின் வீட்டிற்கு வெளியே துப்பாக்கிச் சூடு! குற்றவாளிகள் சுட்டுக்கொலை!

அமெரிக்க வரி விதிப்பால் ஆட்டோமொபைல் உதிரிபாக உற்பத்தி 8% பாதிப்பு!

பில் சால்ட் அதிரடி: டி20 தொடரை வெற்றியுடன் தொடங்கிய இங்கிலாந்து!

SCROLL FOR NEXT