40 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் காத்திருப்பதாக அறிவித்தார் மத்திய அமைச்சர்
10 மாநிலங்களில் புதிய தொழிற்துறை நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக தகவல்
உள்நாட்டு உற்பத்தியை ஊக்குவிக்க 10 மாநிலங்களில் புதிய தொழிற்துறை நகரங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் 10 மாநிலங்களில் ரூ. 28,602 கோடி மதிப்பீட்டில் தேசிய தொழிற்துறை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் 12 தொழில்துறை நகரங்கள் உருவாக்கப்படவுள்ளதாக மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தெரிவித்துள்ளார்.
இதன் அடிப்படையில், உத்தரகண்டில் உள்ள குர்பியா, பஞ்சாபில் உள்ள ராஜ்புரா-பட்டியாலா, மகாராஷ்டிரத்தில் உள்ள திகி, கேரளத்தில் உள்ள பாலக்காடு, உத்தரப்பிரதேசத்தில் உள்ள ஆக்ரா மற்றும் பிரயாக்ராஜ், பிகாரில் உள்ள கயா, தெலங்கானாவில் உள்ள ஜஹீராபாத், ஆந்திரத்தில் உள்ள ஓர்வகல் மற்றும் கோப்பார்த்தி, ராஜஸ்தானில் உள்ள ஜோத்பூர்-பாலி ஆகிய இடங்களில் தொழிற்துறை பகுதிகள் அமைக்கப்படவுள்ளது.
Advertisement
Advertisement
இந்த திட்டத்தின் மூலம் நாட்டின் தொழிற்துறை கட்டமைப்பை மாற்றியமைக்கப்படும்; மேலும், பொருளாதார வளர்ச்சியையும் உலகளாவிய போட்டித்தன்மையையும் கணிசமாக அதிகரிக்கும்.
இவை உலகளாவிய தரத்தின் கிரீன்ஃபீல்ட் ஸ்மார்ட் நகரங்களாக உருவாக்கப்படும்.
மேலும், 10 லட்சம் நேரடி வேலைவாய்ப்புகளும், 30 லட்சம் மறைமுக வேலைவாய்ப்புகளும் உருவாக்கப்பட்டு, சுமார் ரூ. 1.52 லட்சம் கோடி முதலீட்டு திறனை உருவாக்க முடியும்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.