கோப்புப் படம் 
இந்தியா

குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாக பெற்றோர் குற்றச்சாட்டு!

தோல் நோயுள்ள குழந்தைக்கு புறஊதாக் கதிர் சிகிச்சை மேற்கொண்டதில், உடலில் தடிப்புகள் ஏற்பட்டதாக மருத்துவர்கள் விளக்கம்

DIN

புதிதாய் பிறந்த குழந்தைக்கு தவறான சிகிச்சை அளித்ததாகக் கூறிய பெற்றோரால் அரசு மருத்துவமனையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.

மத்தியப் பிரதேசத்தில் அரசு நடத்தும் பிர்சா முண்டா மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில், ஆக. 23, வெள்ளிக்கிழமை, பிறந்த குழந்தைக்கு மஞ்சள் காமாலை சிகிச்சையளிக்க புறஊதாக் கதிர் சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.

இந்த நிலையில், மருத்துவர்கள் தவறான சிகிச்சையை வழங்கியதால், பிறந்து 9 நாள்களேயான குழந்தைக்கு தீக்காயங்கள் ஏற்பட்டிருப்பதாகக் கூறி, மருத்துவர்கள் மீது குழந்தையின் குடும்பத்தினர் குற்றம் சாட்டினர்.

இதனைத் தொடர்ந்து, மருத்துவமனைக்கு வந்தடைந்த காவல்துறையினர், குழந்தையின் குடும்பத்தினரை சமாதானம் செய்ததுடன், மருத்துவர்களிடமும் விசாரணை மேற்கொண்டனர்.

மருத்துவமனையின் மருத்துவ அதிகாரி டாக்டர் நாகேந்திர சிங் கூறியதாவது, ஆகஸ்ட் 25 ஆம் தேதியில் குழந்தைக்கு புறஊதாக் கதிர் சிகிச்சை மேற்கொண்டபோது, குழந்தையின் முதுகு மற்றும் முகத்தில் தடிப்புகள் தோன்றத் தொடங்கியது.

குழந்தை தோல்நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், ஹீமோகுளோபின் அளவு இயல்பைவிட குறைவாக இருப்பதாகவும் தோல் மருத்துவர்கள் கண்டறிந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மேம்பட்ட சிகிச்சைக்காக குழந்தையை ஜபல்பூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லுமாறு குடும்பத்தினருக்கு அறிவுறுத்தியிருந்தோம்.

ஆனால், அவர்கள் அதற்கு பதிலாக மருத்துவமனையில் சலசலப்பை ஏற்படுத்துகின்றனர்" என்று தெரிவித்தனர்.

இதனையடுத்து, குழந்தையின் பெற்றோரை எச்சரித்த காவல்துறையினர், குழந்தையின் மேம்பட்ட சிகிச்சைக்காக குஷாபாவ் தாக்ரே மாவட்ட மருத்துவமனைக்கு அழைத்து செல்லுமாறு கூறியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலியல் வழக்கு: பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஆயுள் தண்டனை!

ஓவல் டெஸ்ட்டில் டிஆர்எஸ் சர்ச்சை; கள நடுவர் செய்தது சரியா?

சாலையோரத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவரின் சடலம்.. ராஜஸ்தானில் அதிர்ச்சி!

கட்டாய மதமாற்ற வழக்கு: கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்

முதல்வர் மீது விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக்கு நம்பிக்கை இல்லை: நயினார் நாகேந்திரன்

SCROLL FOR NEXT