இந்தியா

மத்திய நிதியமைச்சருடன் அமைச்சர் தங்கம் தென்னரசு சந்திப்பு!

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.

DIN

தில்லியில் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனை தமிழக நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு சந்தித்துப் பேசியுள்ளார்.

தில்லியில் நாடாளுமன்ற அலுவலகத்தில் நடைபெற்ற இந்த சந்திப்பில் தமிழகத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதி விகிதாச்சார பிரச்னை மற்றும் ஜிஎஸ்டி வரி பங்கீடு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து மத்திய அமைச்சரிடம் தங்கம் தென்னரசு கோரிக்கை வைத்ததாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனை அமைச்சர் தங்கம் தென்னரசு மரியாதை நிமித்தமாக சந்தித்தாக தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது.

தமிழக அரசின் வணிகவரித் துறை முதன்மைச் செயலாளர் பிஜேந்திர நவநீத், நிதித்துறை துணைச் செயலாளர் பிரத்தீக் தயாள் ஆகியோர் இந்த சந்திப்பின்போது உடனிருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு மருத்துவமனையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களிடம் ராஜ்நாத் சிங் நலம் விசாரிப்பு

ராஜமௌலி படத்தின் போஸ்டரை வெளியிடும் ஜேம்ஸ் கேமரூன்!

"கடக ராசி நேயர்களே!" இந்த வார ராசிபலன்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

வரதட்சிணை கொலை: தப்பியோட முயன்ற கணவரை சுட்டுப்பிடித்த காவல் துறை!

ஹைதராபாத்தில் மனைவியைக் கொன்று உடலைத் துண்டாக்கி ஆற்றில் வீசிய கணவர்!

SCROLL FOR NEXT