கோப்புப்படம். 
இந்தியா

இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ.283 கோடி அபராதம் விதிப்பு

விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா ரூ.283 கோடி அபராதம் விதித்துள்ளது.

DIN

விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாகக் கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு அமெரிக்கா ரூ.283 கோடி அபராதம் விதித்துள்ளது.

பெங்களூருவை தலைமை இடமாகக் கொண்டு செயல்படும் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப நிறுவனம் இன்ஃபோசிஸ். இந்தியா உள்பட 22 நாடுகளில் உள்ள இந்நிறுவனத்தின் கிளை அலுவலங்களில் சுமார் 1.4 லட்சம் ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

விசா முறைகேட்டில் ஈடுப்பட்டதாக இந்நிறுவனம் மீது அண்மையில் குற்றச்சாட்டு எழுந்தது. அமெரிக்காவில் பணியில் அமர்த்திய தனது ஊழியர்களுக்கு ஹெச் 1பி விசாக்களுக்குப் பதிலாக பி-1 பார்வையாளர் விசாக்களை வழங்கியது என்பதே.

இதுதொடர்பாக அமெரிக்க குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத்துறை நடத்திய விசாரணையில் விசா முறைகேடு கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்துதொடர்ந்து அமெரிக்க குடியேற்ற விதிகளை மீறியதற்காக கூறி இன்ஃபோசிஸ் நிறுவனத்திற்கு ரூ. 283 கோடி (34 மில்லியன் டாலர்) அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

283 கோடி ரூபாய் அபராதத் தொகையின் ஒரு பகுதியாக ரூ. 238 கோடியை செலுத்த இன்ஃபோசிஸ் ஒப்புக்கொண்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுவரை அமெரிக்காவில் இந்திய நிறுவனங்களுக்கு விதிக்கப்பட்ட அதிகபட்ச அபராதம் இதுவே ஆகும். அமெரிக்காவில் உள்ள நிறுவனங்களில் ஆயிரக்கணக்கான இந்தியர்கள் உள்பட ஏராளமான வெளிநாட்டினர், ஹெச் 1-பி விசா அனுமதி பெற்று பணியாற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிக் பாஸ் 9: வெளியேறும்போது கூட திவ்யாவை புறக்கணித்த சான்ட்ரா!

ஓரிரு நாள்களில் அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி இணைகிறதா? - இபிஎஸ்

ராகுல் காந்தி நாளை கூடலூர் வருகை!

ரஜினி - 173 புரோமோ இசையமைப்பாளர் இவரா?

அறிவியல் ஆயிரம்: செயற்கை மரபணுவைக் கண்டுபிடித்த ஹர் கோவிந்த் கொரானா!

SCROLL FOR NEXT