தாஜ் மஹால் 
இந்தியா

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல்!

தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மர்மநபர்கள்...

DIN

தாஜ்மஹாலை வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாக மர்மநபர்கள் மின்னஞ்சல் மூலம் மிரட்டல் விடுத்துள்ளனர்.

உத்தரப் பிரதேசத்தின் சுற்றுலாத் துறைக்கு இன்று வந்த மின்னஞ்சலில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு வைத்து தகர்க்க இருப்பதாக மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

உடனடியாக, காவல்துறையினர், வெடிகுண்டு செயலிழப்புப் படையினர், மோப்ப நாய்கள் மூலம் தாஜ்மஹால் மற்றும் அதனைச் சுற்றியுள்ளப் பகுதிகளில் சோதனை நடத்தப்பட்டுள்ளது.

தாஜ்மஹாலில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள்

இதுதொடர்பாக செய்தியாளர்களுடன் பேசிய உதவி காவல் ஆணையர் சையது அரீப் அகமது கூறியதாவது, “சுற்றுலாத் துறைக்கு வந்த மின்னஞ்சலில் தாஜ்மஹாலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. நாங்கள் இந்தப் பகுதி முழுக்க சோதனை செய்தோம். சோதனையில் வெடிகுண்டு எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை. மின்னஞ்சலில் போலியாக மிரட்டல் விடுத்துள்ளனர்” என்று கூறினார்.

இந்த விவகாரம் தொடர்பாக தாஜ்கஞ்ச் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. போலி வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபரைப் பிடிக்க காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமெரிக்க பள்ளியில் துப்பாக்கிச் சூடு! 2 குழந்தைகள் பலி; 17 பேர் படுகாயம்!

தினம் தினம் திருநாளே!

திருவள்ளூரில் போதை மாத்திரைகள் விற்றதாக 5 போ் கைது

பெரம்பலூா் மாவட்டத்தில் விநாயகா் சதுா்த்தி விழா!

அதிமுகவை ஆா்எஸ்எஸ் வழிநடத்துவதில் என்ன தவறு? மத்திய இணையமைச்சா் எல்.முருகன் கேள்வி

SCROLL FOR NEXT