அஜீத் பவார் / ஏக்நாத் ஷிண்டே ANI
இந்தியா

துணை முதல்வர்களாக அஜீத் பவார், ஏக்நாத் ஷிண்டே பொறுப்பேற்பு!

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர்களாக அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் இன்று (டிச. 5) பொறுப்பேற்றுக்கொண்டனர்.

DIN

மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர்களாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜீத் பவாரும், சிவசேனை கட்சித் தலைவர் ஏக்நாத் ஷிண்டேவும் இன்று (டிச. 5) பொறுப்பேற்றுக்கொண்டனர்.

மும்பை ஆசாத் மைதானத்தில் பிரதமர் நரேந்திர மோடி முன்னிலையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில், மாநில ஆளுநர் சி.பி. ராதாகிருஷ்ணன் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

மாநில முதல்வராக பாரதிய ஜனதாவின் தேவேந்திர ஃபட்னவீஸ் பொறுப்பேற்றதைத் தொடர்ந்து, அஜீத் பவாரும், ஏக்நாத் ஷிண்டேவும் துணை முதல்வர்களாக பதவியேற்றுக்கொண்டனர்.

பதவியேற்பு விழாவில் மத்திய அமைச்சர்கள் அமித் ஷா, ஜெ.பி. நட்டா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன், நிதின் கட்கரி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பாஜக தலைவர் முதல்வர்

288 உறுப்பினர்களைக் கொண்ட மகாராஷ்டிரத்துக்கு நடந்துமுடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான ‘மகாயுதி’ கூட்டணி 230 இடங்களைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்கவைத்தது.

இதில் பாஜக, 132 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை 57 இடங்களையும், அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் 41 இடங்களையும் கைப்பற்றின.

பாஜக கூட்டணி பெரும்பான்மையுடன் வென்ற போதிலும், புதிய முதல்வரை தோ்வு செய்வதில் கூட்டணிக் கட்சிகள் இடையே கருத்தொற்றுமை எட்டப்படாமல் இருந்தது.

தோ்தல் முடிவுகள் வெளியாகி ஒரு வாரத்துக்கும் மேலாக இழுபறி நீடித்த நிலையில், பாஜகவின் மத்திய பாா்வையாளா்களான மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன், குஜராத் முன்னாள் முதல்வா் விஜய் ரூபானி முன்னிலையில் அக்கட்சியின் புதிய எம்எல்ஏ-க்கள் கூட்டத்தில் தேவேந்திர ஃபட்னவீஸ் முதல்வராக ஒருமனதாகத் தேர்வு செய்யப்பட்டார்.

இதனைத் தொடர்ந்து துணை முதல்வர்களாக ஏக்நாத் ஷிண்டேவும், அஜீத் பவாரும் பொறுப்பேற்க முடிவானது.

இந்நிலையில், மகாராஷ்டிரத்தில் முதல்வர், துணை முதல்வர்கள் பதவியேற்றுக்கொண்டனர். பதவியேற்றுக்கொண்டவர்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்தார்.

இதையும் படிக்க | மகாராஷ்டிர முதல்வராக 3வது முறையாக பதவியேற்றார் தேவேந்திர ஃபட்னவீஸ்!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிகபட்சமாக நிதித்துறைக்கு ரூ. 19 லட்சம் கோடி! துறை வாரியாக முழு விவரம்!

தேர்தல் இருந்தும்... மாற்றம் இல்லாத ஏமாற்றம்! - பட்ஜெட் பற்றி கனிமொழி

நிர்மலா சீதாராமன் கட்டியிருக்கும் காஞ்சிபுரம் பட்டுப் புடவையின் பின்னணி!

தலைவர் - 173... வாக்கு கொடுத்த சிபி சக்ரவர்த்தி!

மத்திய பட்ஜெட் 2026 - நேரலை: செய்திகள் உடனுக்குடன்!

SCROLL FOR NEXT