ராமேஸ்வரம்: அஜீத் பவார் அஸ்தி அக்னி தீர்த்த கடலில் கரைக்கப்பட்டது!
மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.
மறைந்த மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி ராமேஸ்வரத்தில் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் விமான விபத்தில் பலியான மாநில துணை முதல்வர் அஜீத் பவாரின் அஸ்தி, இன்று ராமேஸ்வரத்தில் உள்ள அக்னி தீர்த்த கடலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியினரால் கரைக்கப்பட்டது.
மகாராஷ்டிரத்தில் ஜன. 28 ஆம் தேதியில் மும்பையில் இருந்து அஜீத் பவாா் புறப்பட்ட தனி விமானம், புணே மாவட்டம் பாராமதி விமான நிலையத்தில் இறங்கும் முன்பாக தரையில் மோதி வெடித்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அஜீத் பவார் உள்பட 5 பேர் பலியாகினர்.
Advertisement
Advertisement
அஜீத் பவார் விமான விபத்தில் பலியான மறுநாளே, அவரது இறுதிச் சடங்குகள் பாராமதியில் நடைபெற்று முடிந்தது. லட்சக்கணக்கான மக்கள் அவரது இறுதிச் சடங்கில் பங்கேற்றனர்.
அதுமட்டுமின்றி, மாநில துணை முதல்வராக அவரது மனைவியான சுநேத்ரா பவார் பதவியும் ஏற்றுக் கொண்டார்.
Former Maharashtra Deputy CM Ajit Pawar's ashes were immersed in the sea of Agni Theertha
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.