நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்பி இருக்கையில் கட்டுக்கட்டாக பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் மாநிலங்களவை தலைவர் ஜகதீப் தன்கர் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.
நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில், இன்று காலை மாநிலங்களவை கூடியதும், முக்கிய அறிவிப்பு ஒன்றை உறுப்பினர்கள் மத்தியில் ஜகதீப் தன்கர் வெளியிட்டார்.
”அவை கலைந்தவுடன் வழக்கமான சோதனைகள் நேற்று செய்யப்பட்டன. அப்போது, அபிஷேக் மனு சிங்விக்கு ஒதுக்கப்பட்டுள்ள இருக்கை எண் 222-ல் அதிகளவிலான பணத்தை பாதுகாப்பு அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனர்.
இந்த விவகாரம் குறித்து என்னிடம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்.
தெலங்கானா மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக காங்கிரஸ் சார்பில் அபிஷேக் மனு சிங்வி தேர்ந்தெடுக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.