பனிப்பாறை 
இந்தியா

உத்தரகண்டில் மிக வேகமாக வளரும் பனிப்பாறை கண்டுபிடிப்பு

உத்தரகண்ட் மாநிலத்தில் மிக வேகமாக வளரும் பனிப்பாறை கண்டுபிடிப்பு

DIN

உத்தரகண்ட் மாநிலம் நிதி பள்ளத்தாக்குப் பகுதியில் 10 கிலோ மீட்டர் அகலம் கொண்ட மிக வேகமாக வளரும் பனிப்பாறையை விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

பனிப்பாறைகள் தொடர்பாக தொடர்ந்து ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள் குழுவினர், மிக வேகமாக வளர்ந்து வரும் புதிய பனிப்பாறையை கண்டுபிடித்து வெளிப்படுத்தியிருக்கிறார்கள். மலைப் பிரதேசமான உத்தரகண்டின் வட எல்லைப் பகுதியில் கிட்டத்தட்ட இந்தியா - திபெத் எல்லையில் இந்த பனிப்பாறை அமைந்துள்ளது.

இந்த பனிப்பாறைக்கு இதுவரை பெயர் சூட்டப்படவில்லை. இது ரண்டோல்ப் மற்றும் ரேகனா பனிப்பாறைகளுக்கு அருகே 48 சதுக கிலோ மீட்டரில் அமைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

செயற்கைக் கோள் தகவலின் மூலம் இந்த பனிப்பாறை பற்றிய தகவல் கிடைத்திருப்பதாகவும், தற்போது இது வேகமாக வளர்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஹைட்ரலாஜிகல் சமநிலையின்மையே இதற்குக் காரணம் என்றும் தண்ணீரின் நீர்த்தன்மை குறைந்து அவை படிப்படியாக பனித்திட்டுகளாக மாறுவதால் இந்தப் பனிப்பாறை வேகமாக வளர்வதாகவும் கூறப்படுகிறது. இதன் கெடுபயனாக சில வேளைகளில் பனிப்பாறைகள் உடைந்து கீழே விழும் அபாயமும் இருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஸ்பெயின் சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப்!

அழகான அதிகாரம்... ஜனனி!

தீபாவளி கூட்ட நெரிசலைத் தவிர்க்க ரயில்வே நடைமேடை டிக்கெட்டுகள் விற்பனை நிறுத்தம் -வடக்கு ரயில்வே

ஸுபீன் கார்க் வழக்கு: கைதிகளை சிறை மாற்றும்போது காவல் துறை வாகனத்திற்கு தீ வைப்பு!

மாஸ்கோவில் புதினுடன் சிரியாவின் இடைக்கால அதிபர் சந்திப்பு!

SCROLL FOR NEXT