Ajit Pawar 
இந்தியா

அஜீத் பவாரின் ரூ. 1,000 கோடி சொத்துகளை விடுவித்த வருமானவரித் துறை!

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவாருக்குச் சொந்தமான ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானவரித் துறை இன்று விடுவித்துள்ளது.

DIN

மகாராஷ்டிர துணை முதல்வர் அஜீத் பவார் மற்றும் அவரது குடும்பத்திற்குச் சொந்தமான ரூ. 1,000 கோடி மதிப்பிலான சொத்துகளை வருமானவரித் துறை இன்று விடுவித்துள்ளது.

சமீபத்தில் மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தல் நடந்து முடிந்த நிலையில் பாஜக தலைமையிலான மஹாயுதி கூட்டணி ஆட்சி அமைத்தது.

கடந்த வியாழக்கிழமை(டிச. 5) ஆம் தேதி மகாராஷ்டிர முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸும் துணை முதல்வர்களாக சிவசேனையைச் சேர்ந்த ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் கட்சியின் அஜீத் பவார் ஆகியோர் பதவியேற்றனர்.

துணை முதல்வராக பதவியேற்ற ஒரேநாளில் அஜீத் பவாருக்குச் சொந்தமான ரூ. 1,000 கோடிக்கும் மேற்பட்ட சொத்துக்களை வருமான வரித்துறை விடுவித்துள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு தேசியவாத காங்கிரஸ் - சிவசேனை கூட்டணி ஆட்சியில் அஜீத் பவார் துணை முதல்வராக இருந்தபோது, அஜீத் பவார் மற்றும் அவரது குடும்பத்தினருக்குச் சொந்தமான இடங்களில் வருமானவரித் துறை சோதனை நடத்தியது.

இதில் சொத்துகள் அனைத்தும் முறைகேடாக சம்பாதித்தாகக் கூறி பினாமி சட்டத்தின் கீழ் இந்த சொத்துகள் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

குண்டா் சட்டத்தில் இளைஞா் கைது

பவானியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த மின்வாரிய ஊழியரின் உடல் உறுப்புகள் தானம்

காரில் புகையிலைப் பொருள் கடத்தல்: இளைஞா் கைது

இளைஞரிடம் தங்கச் சங்கிலி வழிப்பறி

அரசு வேலை வாங்கித் தருவதாகக் கூறி பண மோசடி செய்தவா் கைது

SCROLL FOR NEXT