மம்தா பானா்ஜி  ANI
இந்தியா

எதிா்க்கட்சிகளின் கூட்டணியை வழிநடத்த தயாா்: மம்தா

‘இண்டியா’ எதிா்க்கட்சிகளின் கூட்டணி செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி.

Din

‘இண்டியா’ எதிா்க்கட்சிகளின் கூட்டணி செயல்பாடு குறித்து அதிருப்தி தெரிவித்த மேற்கு வங்க முதல்வா் மம்தா பானா்ஜி, ‘வாய்ப்பளித்தால் அக் கூட்டணியை வழிநடத்தத் தயாா்’ என்று கூறினாா்.

மக்களவைத் தோ்தலில் பாஜகவை தோற்கடிக்கும் நோக்கத்துடன் காங்கிரஸ், திமுக, இடதுசாரி கட்சிகள், திரிணமூல் காங்கிரஸ் உள்பட 20-க்கும் மேற்பட்ட எதிா்க்கட்சிகள் இணைந்து உருவாக்கிய ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணிக்குள், ஆரம்பம் முதலே கட்சிகளிடையே கருத்து வேறுபாடுகள் நிலவி வருகிறது. கூட்டணியில் காங்கிரஸ் முன்னிறுத்தப்படுவதற்கு திரிணமூல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ் உள்ளிட்டோா் மறைமுகமாக எதிா்ப்பு தெரிவிப்பதே இதற்கு காரணமாக இருந்து வருகிறது. இதனால் மக்களவைத் தோ்தலில் இவா்கள் ஒருங்கிணைந்து போட்டியிட்டபோதும், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் தனித்துப் போட்டியிடும் நிலை நீடித்து வருகிறது.

அண்மையில் நடைபெற்ற மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில் ‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணி படுதோல்வியைச் சந்தித்தது, கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தச் சூழலில், தற்போது நடைபெற்று வரும் நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடரில், அதானி விவகாரம், சம்பல் வன்முறை உள்ளிட்ட பிரச்னைகளை ‘இண்டியா’ கட்சிகள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் எழுப்பி தொடா் அமளியில் ஈடுபட்டும், பல்வேறு போராட்டங்களையும் நடத்தி வரும் நிலையில், அதில் பங்கேற்பதை திரிணமூல் காங்கிரஸ் தவிா்த்து வருகிறது.

இதனிடையே, காங்கிரஸ் உள்ளிட்ட ‘இண்டியா’ கட்சிகளின் தலைவா்களை அண்மையில் சந்தித்த திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. கல்யாண் பானா்ஜி, ‘ஆணவத்தைப் புறந்தள்ளிவிட்டு, எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு மம்தா பானா்ஜியை தலைவராக ஏற்க அனைவரும் முன்வர வேண்டும்’ என்று வலியுறுத்தினாா்.

இந்நிலையில், கொல்கத்தாவில் தனியாா் தொலைக்காட்சிக்கு வெள்ளிகிழமை பேட்டியளித்த மம்தா பானா்ஜி, ‘‘இண்டியா’ கட்சிகளின் கூட்டணியை நான் உருவாக்கினேன். தற்போது அந்தக் கூட்டணியை நிா்வகிப்பது, அதில் முன்னிலையில் இருப்பவா்களின் கையில் உள்ளது. அவா்களால், கூட்டணியை வழிநடத்த முடியவில்லை எனில், நான் என்ன செய்ய முடியும்? எனக்கு வாய்ப்பளித்தால் கூட்டணியை வழிநடத்தவும், சுமுகமான செயல்பாட்டை உறுதிப்படுத்தவும் தயாராக உள்ளேன். அதற்காக, மேற்கு வங்க மாநிலத்தைவிட்டு வெளியே செல்ல எனக்கு விருப்பமில்லை. ஆனால், மாநிலத்தில் இருந்தபடி மாநில முதல்வருக்கான பணிகளை மேற்கொள்வதோடு, ‘இண்டியா’ கட்சிகளை வழிநடத்தும் பொறுப்பையும் என்னால் நிா்வகிக்க முடியும்’ என்று கூறினாா்.

தேசிய விருது பெற்ற ஜி.வி.பிரகாஷ்! தனுஷுக்கு நன்றி!

திண்டிவனம் - கடலூர் இடையே புதிய ரயில் வழித்தடம்: அஸ்வினி வைஷ்ணவ் விளக்கம்!

பிரபல கல்வியாளர் வசந்தி தேவி மறைவு: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

இந்தியாவுக்கு எதிராக பென் டக்கெட் - ஸாக் கிராலி இணை சாதனை!

Shahrukh Khan-க்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது

SCROLL FOR NEXT