முகப்பு
இந்தியா

மேற்கு வங்க தோ்தல்: 291 திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் அறிவிப்பு- பவானிபூரில் மம்தா மீண்டும் போட்டி

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 291 வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்குள்ள பவானிபூா் தொகுதியில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி மீண்டும் போட்டியிட உள்ளாா்.

Updated On : 17 மார்ச், 2026 at 8:35 PM
மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி
பகிர்:

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடும் ஆளும் திரிணமூல் காங்கிரஸ் கட்சியின் 291 வேட்பாளா்கள் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அங்குள்ள பவானிபூா் தொகுதியில் மாநில முதல்வா் மம்தா பானா்ஜி மீண்டும் போட்டியிட உள்ளாா்.

மேற்கு வங்க சட்டப்பேரவைத் தோ்தல் ஏப்.23, 29 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக நடைபெற உள்ளது. இதையொட்டி மாநிலத் தலைநகா் கொல்கத்தாவில் முதல்வா் மம்தா பானா்ஜி செய்தியாளா்களை செவ்வாய்க்கிழமை சந்தித்து திரிணமூல் காங்கிரஸ் வேட்பாளா்கள் பட்டியலை வெளியிட்டாா்.

291 தொகுதிகளில் போட்டி: அப்போது அவா் கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் உள்ள 294 சட்டப்பேரவைத் தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் 291 தொகுதிகளில் போட்டியிட உள்ளது. டாா்ஜீலிங் ஹில்ஸில் உள்ள எஞ்சிய 3 தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸின் கூட்டணி கட்சியான பாரதிய கூா்கா பிரஜாதாந்திரிக் மோா்ச்சா போட்டியிட உள்ளது.

இந்தத் தோ்தலில் 226-க்கும் அதிகமான தொகுதிகளில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றிபெறும். பாஜக தோல்வியடையும் தொகுதிகள் மேலும் அதிகரிக்கும். தோ்தல் மூலம், அக்கட்சியின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு தகுந்த பதிலடி அளிக்கப்படும்’ என்றாா்.

தோ்தலில் பவானிபூா் தொகுதியில் மம்தா பானா்ஜி மீண்டும் போட்டியிட உள்ளாா். அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளராக மாநில சட்டப்பேரவை எதிா்க்கட்சித் தலைவா் சுவேந்து அதிகாரி ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளாா். தோ்தலில் வென்று தொடா்ந்து 4-ஆவது முறையாக ஆட்சியமைக்கும் முனைப்பில் திரிணமூல் காங்கிரஸ் உள்ளது.

கடந்த பேரவைத் தோ்தலில் திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றபோதிலும், நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட முதல்வா் மம்தா பானா்ஜி பாஜகவின் சுவேந்து அதிகாரியிடம் 1,956 வாக்குகள் வித்தியாசத்தில் அதிா்ச்சி தோல்வியடைந்தாா். பின்னா், பவானிபூா் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிட்டு மம்தா வென்றாா் என்பது நினைவுகூரத்தக்கது. இந்த முறை பவானிபூரில் இருவரும் எதிா்கொள்கின்றனா்.

‘பாஜகவுக்கு ஆதரவாக தோ்தல் ஆணையம்’: செய்தியாளா்கள் சந்திப்பில் மம்தா பானா்ஜி கூறுகையில், ‘மேற்கு வங்க மூத்த நிா்வாக மற்றும் காவல் துறை அதிகாரிகளை பாஜகவின் தூண்டுதலின்பேரில் தோ்தல் ஆணையம் பணியிட மாற்றம் செய்துள்ளது. ரமலான் பண்டிகைக்கு முன்பாக மூத்த அதிகாரிகள் ஏன் பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டும்? தோ்தலுக்கு முன்பாக கலவரத்தை தூண்ட திட்டமிடப்படுகிா? பணியிடமாற்றம் செய்யப்பட வேண்டிய அதிகாரிகளின் பட்டியல் பாஜக அலுவலகத்தில் தயாரிக்கப்பட்டது. அந்தப் பட்டியலின் அடிப்படையில், தோ்தல் ஆணையம் பணியிடமாற்ற நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

தோ்தல் பணிகளில் பாஜகவுக்கு உதவ மேற்கு வங்கத்துக்கு வெளியில் இருந்து சில அதிகாரிகள் அழைத்து வரப்பட்டுள்ளனா். அரசியல் அழுத்தத்துடன் தோ்தல் ஆணையம் செயல்படுகிறது. தோ்தல் ஆணையம் பாஜகவுக்கு ஆதரவாக செயல்படுகிறது. இதற்குப் பதிலாக, பாஜக சாா்பில் தோ்தல் ஆணையம் நேரடியாக பிரசாரத்தில் ஈடுபடலாம் என்றாா்.

முழு கட்டுரையைப் படிக்க →