பிடிபட்ட சிறுத்தை. 
இந்தியா

ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு

ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு நிலவியது.

DIN

ஜெய்ப்பூரில் குடியிருப்பு பகுதியில் புகுந்து 3 பேரைத் தாக்கிய சிறுத்தையால் பரபரப்பு நிலவியது.

ராஜஸ்தான் மாநிலம், வித்யாதர் நகர் பகுதியில் உள்ள குடியிருப்பு காலனிக்குள் சனிக்கிழமை புகுந்த சிறுத்தை திடீரென அங்கிருந்தவர்களைத் தாக்கியது. இச்சம்பவத்தில் 3 பேர் காயமடைந்தனர்.

தகவல் கிடைத்ததும் வனத்துறையினர், போலீஸார் மற்றும் சிவில் பாதுகாப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். பின்னர் நீண்ட நேர போராட்டத்துக்குப் பிறகு அந்த சிறுத்தை அமைதிப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டது.

இதுகுறித்து வனத்துறை துணை காப்பாளர் ஜெகதீஷ் குப்தா கூறியதாவது: வித்யாதர் நகரில் சிறுத்தை நடமாட்டம் குறித்து தகவல் கிடைத்தது.

போலீஸ் காவலில் இருந்த நபர் மரணம்: முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி விடுவிப்பு!

அந்த சிறுத்தை மத்திய பொதுப்பணித் துறை தோட்டத்தில் உள்ள செடிகளுக்குப் பின்னால் உள்ள அரசு விருந்தினர் மாளிகையில் முதலில் காணப்பட்டது.

அப்போது சாலையில் இறங்கிய சிறுத்தை 3 பேரைத் தாக்கியது. அங்கிருந்தவர்களில் சிலர் அந்த சிறுத்தையை துரத்திச் சென்று படம்பிடித்தனர்.

பின்னர் சிறுத்தை அமைதிப்படுத்தப்பட்டு மீட்கப்பட்டது. நஹர்கர் வனப்பகுதியின் பெரும்பகுதி வித்யாதர் நகர் பகுதியுடன் இணைக்கப்பட்டுள்ளது.

எனவேதான், உணவு அல்லது தண்ணீரைத் தேடி அவ்வப்போது சிறுத்தை உலா வருகிறது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன் அழகில் மயிலும் தோற்கும்... அனன்யா பாண்டே!

‘நலம் காக்கும் ஸ்டாலின்’ முகாம்கள் மூலம் இதுவரை 1.49 லட்சம் பேர் பயன்: முதல்வர் ஸ்டாலின்

ரஜினியைச் சந்தித்த சிம்ரன்! ஏன்?

அனில் அம்பானியால் எஸ்பிஐ-க்கு ரூ. 2,929 கோடி இழப்பு: சிபிஐ சோதனை முடிவு!

ஜன நாயகனில் புஸ்ஸி ஆனந்த்?

SCROLL FOR NEXT