ஜம்மு-காஷ்ர்.  
இந்தியா

ஜம்மு-காஷ்மீா்: சக ஊழியரை சுட்டுக்கொன்று காவலா் தற்கொலை

ஜம்மு-காஷ்மீரின் உதம்பூர் மாவட்டத்தில் துப்பாக்கி சூட்டு காயங்களுடன் 2 போலீஸார் சடலமாக மீட்கப்பட்டனர்.

DIN

ஜம்மு காஷ்மீா் மாநிலம், உதம்பூா் மாவட்டத்தில் சக ஊழியரைச் சுட்டுக் கொன்ற தலைமைக் காவலா், தானும் தற்கொலை செய்துகொண்டதாக காவல்துறையினா் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனா்.

இச்சம்பவம் தொடா்பாக உதம்பூா் காவல் கண்காணிப்பாளா் அமோத் அசோக் நாக்புரே கூறியதாவது:

உதம்பூா் மாவட்டம், ரெஹம்பல் பகுதியில் உள்ள கோயில் அருகே ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வடக்கு காஷ்மீரின் சோபூரில் இருந்து ஜம்மு பிராந்தியத்தின் ரியாசி மாவட்டத்தில் உள்ள தல்வாரா பகுதி துணை பயிற்சி மையத்துக்கு காவல்துறையினா் மூவா் சென்றுகொண்டிருந்தனா்.

அப்போது, வாகனத்தில் இருந்த தலைமைக் காவலா் மற்றும் வாகன ஓட்டுநா் இடையே வாக்குவாதம் எழுந்த நிலையில், வாகன ஓட்டுநரைச் சுட்டுக்கொன்ற தலைமைக் காவலா், தானும் தற்கொலை செய்துகொண்டாா். அவா்களுடன் பயணித்த மூன்றாவது அதிகாரியிடம் இது தொடா்பாக விசாரணை நடத்தி வருகிறோம் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தில்லியில் காங்கிரஸ் எம்.பி. சுதாவின் தங்கச் செயின் பறிப்பு

சவூதியில் 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை நிறைவேற்றம்!

போரை நிறுத்தினேன்! உலகில் ஐந்து போர்களை நிறுத்தியதாக டிரம்ப் பெருமிதம்!

மேட்டூர் அணை நீர்மட்டம் குறைந்தது !

கணவருடனான பிரிவு முடிவை கைவிட்ட சாய்னா நேவால்!

SCROLL FOR NEXT