யோகேந்திர சோலங்கி கோப்புப் படம்
இந்தியா

பாஜக தலைவர் மீது பாலியல் வழக்கு!

பலமுறை பாலியல் வன்கொடுகை செய்ததாக, 23 வயது பெண் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு

DIN

மத்தியப் பிரதேசத்தில் பாஜக மாவட்டத் தலைவர் மீது பாலியல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில் வழக்கு பதியப்பட்டுள்ளது.

மத்தியப் பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தின் பாஜக துணைத் தலைவராக இருப்பவர் யோகேந்திர சோலங்கி. இவர் மீது 23 வயது பெண் ஒருவர் விதிஷா காவல் நிலையத்தில் பாலியல் புகார் அளித்துள்ளார். இப்பெண் சோலங்கிக்கு மருமகள் முறை என்றும் முதல் தகவல் அறிக்கையில் (எஃப்.ஐ.ஆர்.) குறிப்பிடப்பட்டுள்ளது.

இது தொடர்பாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டதாவது,

யோகேந்திர சோலங்கி பலமுறை வலுக்கட்டாயமாக பாலியல் வன்கொடுமை செய்ததாக 23 வயது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார். இதனைத் தொடர்ந்து அப்பெண்ணுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அதில், பலமுறை வன்கொடுமைக்குள்ளானது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் இந்த புகார் தொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனிடையே பாலியல் புகாரைத் தொடர்ந்து, பாஜக துணைத் தலைவர் பொறுப்பை சோலங்கி ராஜிநாமா செய்தார். மேலும் கட்சி அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் விலகினார்.

தனக்கு எதிராக பொய்யான குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளதாகவும், இது தொடர்பாக வெளிப்படையான விசாரணை நடத்த வேண்டும் எனவும் சோலங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

காஞ்சிபுரத்தில் அண்ணா பிறந்தநாள் விழா: அனைத்துக் கட்சியினர் மரியாதை!

அண்ணா பிறந்த நாள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் மரியாதை!

மேட்டூர் அணை நிலவரம்!

'புரிய வேண்டியவர்களுக்கு புரிய வேண்டும்' - செங்கோட்டையன்

தங்கம் விலை குறைவு: இன்றைய நிலவரம்!

SCROLL FOR NEXT