தில்லி உணவகத்தில் தீ -
இந்தியா

தில்லி உணவகத்தில் தீ விபத்து: மாடியிலிருந்து குதித்த மக்கள்

தில்லி உணவகத்தில் பயங்கர தீ விபத்தின்போது மாடியிலிருந்து குதித்த வாடிக்கையாளர்கள்.

DIN

புது தில்லி: மேற்கு தில்லியின் ரஜௌரி கார்டென் பகுதியில் உள்ள உணவகத்தில் திங்கள்கிழமை மிகப் பயங்கர தீவிபத்து நேரிட்டது. உணவகத்தில் இருந்தவர்கள் மாடியிலிருந்து குதித்து உயிர்தப்பியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தீ விபத்து குறித்துத் தகவல் அறிந்ததும் 10 தீயணைப்பு வாகனங்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன.

தீ விபத்து நேரிட்ட கட்டடத்தில், பயிற்சி மையம் இயங்கி வந்ததாகவும், அதிலிருந்து மாணவர்கள் தீ விபத்தில் சிக்கிக் கொள்ளாமல் இருக்க மிகவும் அபாயகரமான வகையில் அருகில் இருந்த கட்டடங்களில் குதித்து உயிர் தப்பிய விடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அதுபோல உணவகத்தில் இருந்தவர்களும் மாடியிலிருந்து குதித்து உயிர்தப்பினர்.

பிற்பகலில், தீயணைப்புத் துறையினருக்கு, இது குறித்து தகவல் வந்ததாகவும், விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்ததாகவும் கூறப்படுகிறது.

தீ விபத்து நேரிட்டபோது, உணவகத்துக்குள் 20க்கும் மேற்பட்டவர்கள் இருந்திருகக்லாம் என்றும், அவர்கள் அனைவரும் உயிரைக் காப்பாற்றிக் கொள்ள அருகில் இருந்த கட்டடங்களில் குதித்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலதிகத் தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருங்குயில்... திவ்யா துரைசாமி!

மகளிர் உலகக் கோப்பை தோல்வி எதிரொலி! பாகிஸ்தான் அணி தலைமைப் பயிற்சியாளர் நீக்கம்!

பிலிப்பின்ஸில் ‘கேல்மெகி புயல்’ கோரத்தாண்டவம்: 26 பேர் உயிரிழப்பு!

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

SCROLL FOR NEXT