மும்பை: டிஜிட்டல் கைது தொடர்பாக மக்களுக்கு பெரிய அளவில் எச்சரிக்கை ஏற்படுத்தப்பட்டாலும் இன்னமும் அது பற்றி தெரியாமல் ஏமாறுபவர்களும் இருக்கத்தான் செய்கிறார்கள்.
ஆனால் மும்பையைச் சேர்ந்த பெண், டிஜிட்டல் கைது என்ற பெயரில் மோசடி செய்பவர்களிடமிருந்து மிக சாமர்த்தியமாக தப்பியிருக்கிறார்.
35 வயதாகும் வீட்டின் குடும்பத் தலைவியான பெண் ஒருவருக்கு மோசடியாளர்கள் செல்போனில் அழைத்து டிஜிட்டல் கைது செய்திருப்பதாகக் கூறியிருக்கிறார்கள். அவரும் முதலில் தனது ஆதார் கார்டை எல்லாம் காட்டியிருக்கிறார். பிறகுதான் அவருக்கு சட்டென சந்தேகம் வந்தது. உடனடியாக சுதாரித்துக்கொண்டு அவர்களை வீட்டுக்கு நேரடியாகவே வந்து விசாரணை நடத்தும்படி கூறிவிட்டு அழைப்பை துண்டித்திருக்கிறார்.
ஆதார் எண் விவரங்களை அளித்திருப்பதால் அது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
அப்பெண் கூறுகையில், என்னை தொடர்பு கொண்ட ஒரு வாய்ஸ் ரெக்கார்டிங் அழைப்பில், உங்கள் செல்போன் என் முடக்கப்படவிருக்கிறது என்று கூறினார்கள். பிறகு அதன் தொடர்ச்சியாக எனது ஆதார் எண் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் 15 பேர் என் மீது புகார் அளித்திருப்பதாகவும் கூறினார்கள்.
பிறகு விடியோ காலில் வந்த நபர், தன்னை மும்பை காவலர் என அறிமுகம் செய்துகொண்டார். காக்கி உடையில் இருந்தார். அவர் ஆதார் மற்றும் புகைப்படங்களை வாட்ஸ் ஆப்பில் அனுப்புமாறு கோரியிருக்கிறார். அப்பெண்ணும் அனுப்பியிருக்கிறார்.
அப்போது, அவர் 2 கோடி ரூபாய் அளவுக்கு மோசடி செய்திருப்பதாகப் புகார் வந்திருப்பதாகவும், வங்கிக் கணக்கு விவரங்களைக் கூறுமாறு காவலர்கள் கேட்ட போதுதான் அப்பெண்ணுக்கு சந்தேகம் வந்துள்ளது.
உடனடியாக அவர் காவல்துறை அதிகாரி போல நடித்த மோசடியாளரிடம் நேரடியாக வந்து விசாரணை நடத்திக்கொள்ளுங்கள் என்று கூறியிருக்கிறார். இது பற்றி காவல்நிலையத்தில் புகார் அளித்திருக்கிறார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.