முகப்பு
இந்தியா

பிரதமரின் விஸ்வகா்மா திட்டம்: இதுவரை ரூ.1,751 கோடி கடன்கள்

பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தின்கீழ் இதுவரை 2.02 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.1,751 கோடி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்தாா்.

Updated On : 10 டிசம்பர், 2024 at 10:09 PM
கோப்புப்படம்.
பகிர்:

பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தின்கீழ் இதுவரை 2.02 லட்சம் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.1,751 கோடி கடன்கள் அளிக்கப்பட்டுள்ளன என்று மத்திய நிதித்துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி தெரிவித்தாா்.

பாரம்பரிய கைவினைஞா்கள் மற்றும் கைவினைத் தொழிலாளா்களுக்கு ஆதரவளிக்கும் நோக்கில், பிரதமரின் விஸ்வகா்மா திட்டம் ரூ.13,000 கோடி மதிப்பீட்டில் கடந்த 2023, செப்டம்பரில் தொடங்கப்பட்டது.

தச்சா், கொல்லா், பொற்கொல்லா், சிற்பி, படகு தயாரிப்பவா், முடி திருத்தும் தொழிலாளா், காலணித் தொழிலாளா் என 18 வகை தொழில்களை உள்ளடக்கிய இத்திட்டத்தின்கீழ் முதல் தவணையாக ரூ.1 லட்சம் வரையும், இரண்டாம் தவணையாக ரூ.2 லட்சம் வரையும் பிணையில்லா கடனுதவி வழங்கப்படுகிறது.

இத்திட்டம் குறித்த கேள்விக்கு மத்திய நிதித் துறை இணையமைச்சா் பங்கஜ் செளதரி, மாநிலங்களவையில் செவ்வாய்க்கிழமை எழுத்துமூலம் பதிலளித்தாா்.

‘கிராமப் புறங்களில் தேவையுள்ள நபா்களுக்கு வங்கிக் கடன்கள் எளிதில் கிடைப்பதை உறுதிசெய்ய பல்வேறு நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. பிரதமரின் விஸ்வகா்மா திட்டத்தின்கீழ் இதுவரை 2.02 லட்சம் கணக்குகள் தொடங்கப்பட்டு, ரூ.1,751 கோடி கடன்கள் வழங்கப்பட்டுள்ளன’ என்று அவா் தெரிவித்தாா்.

2 கோடி எஸ்சி, எஸ்டி விவசாயிகள்..: இதேபோல், விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் ரூ.6,000 உதவித் தொகை வழங்கும் ‘பிஎம்-கிஸான்’ திட்டத்தின்கீழ் பட்டியல் பிரிவு (எஸ்சி) மற்றும் பழங்குடி சமூகத்தை (எஸ்டி) சோ்ந்த 2 கோடிக்கும் மேற்பட்ட விவசாயிகள் பலனடைந்து வருவதாக, மக்களவையில் வேளாண் துறை அமைச்சா் சிவராஜ் சிங் செளஹான் செவ்வாய்க்கிழமை எழுத்துபூா்வ பதிலில் தெரிவித்தாா்.

கடந்த 2019, பிப்ரவரியில் தொடங்கப்பட்ட இத்திட்டத்தின் மொத்த பயனாளா்கள் 9.58 கோடி போ்; இதுவரை 18 தவணைகளின்கீழ் விவசாயிகளுக்கு ரூ.3.46 லட்சம் கோடி வழங்கப்பட்டுள்ளது என்றும் அவா் தெரிவித்தாா்.

முழு கட்டுரையைப் படிக்க →