கோப்புப் படம் 
இந்தியா

தேர்தலில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கிராமத்தினர் தீர்மானம்!

மகாராஷ்டிரத்தில் இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற தீர்மானம் நிறைவேற்றிய கிராமத்தினர்.

DIN

மகாராஷ்டிரத்தில் கோலேவாடி கிராமத்தினர் இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்ற கிராம சபைக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.

மகாராஷ்டிர சதாரா மாவட்டத்தின் கோலேவாடி கிராமம் காரத் சட்டமன்றத் தொகுதியின் கீழ் வருகிறது. இந்தத் தொகுதியில் முன்னதாக காங்கிரஸ் மூத்தத் தலைவரும் முன்னாள் முதல்வருமான பிரித்விராஜ் சௌகான் எம்எல்ஏவாக இருந்தார். இந்த முறை நடைபெற்ற தேர்தலில் பாஜகவின் அதுல் போஸ்லே 39,355 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

அவர் வெற்றி பெற்றதில் வாக்குப்பதிவு இயந்திரத்தில் முறைகேடு நடந்திருக்கலாம் என கோலேவாடி கிராமத்தினர் பலரும் சந்தேகித்ததைத் தொடர்ந்து இனிவரும் தேர்தல்களில் வாக்குச்சீட்டு முறையைப் பின்பற்றுவதற்கு தீர்மானம் நிறைவேற்ற முடிவெடுத்துள்ளனர்.

முன்னதாக மகாராஷ்டிரத்தின் மால்ஷிராஸ் தொகுதியில் உள்ள மார்கத்வாடி கிராமவாசிகள், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் நம்பகத்தன்மையைச் சந்தேகித்து, வாக்குச் சீட்டுகளைப் பயன்படுத்தி மறு வாக்குப்பதிவு நடத்த போராடியதைத் தொடர்ந்து அவர்கள் காவல்துறையால் தடுத்து நிறுத்தப்பட்டு, வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.

இதனைத் தொடர்ந்து இந்தக் கிராமத்தில் இன்று கிராம சபை கூடி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையம் இந்தக் கோரிக்கையைக் கருத்தில் கொண்டு வாக்குச்சீட்டு முறைக்குத் திரும்பவேண்டும் என்றும் அவ்வாறு தேர்தல் ஆணையம் செய்யவில்லை என்றால் நாங்கள் வாக்குப்பதிவு இயந்திரத்தில் வாக்களிக்காமல் தேர்தலைப் புறக்கணிப்போம் என்றும் அவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதுதொடர்பாக சதாரா மாவட்ட ஆட்சியர் ஜிதேந்திர தூதி கூறுகையில், “கோலேவாடி கிராமத்தினர் செய்துள்ள தீர்மானத்தின் நகல் எங்களுக்கு அனுப்பபடவில்லை. அதனால் இதுகுறித்து என்னால் கருத்து சொல்லமுடியாது. நகல் எங்களுக்கு அனுப்பப்பட்டால் அதற்குரிய நடவடிக்கைகளை எடுப்போம்” என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்குத் திருட்டு: பிரதமர் மோடி வெளியே முகம் காட்ட தயங்கும் நிலைமை விரைவில் ஏற்படும்! -ராகுல் காந்தி

2,900 யூனிட் இ-விட்டாரா கார்களை ஏற்றுமதி செய்த மாருதி சுசுகி!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு! | செய்திகள்: சில வரிகளில்| 1.9.25

டிராகன் முன்பு சரணடைந்தது யானை: மோடியை விமர்சிக்கும் காங்கிரஸ்

பைசன் காளமாடன்: மாரி செல்வராஜ் எழுதிய தீக்கொளுத்தி பாடல்!

SCROLL FOR NEXT