கோப்புப் படம் 
இந்தியா

மனைவியின் புகைப்படம் நிர்வாணமாகச் சித்திரிப்பு! கடன் செயலியால் கணவன் தற்கொலை!

மனைவியின் புகைப்படத்தை நிர்வாணமாகச் சித்திரித்த கடன் செயலி முகவர்களால் கணவன் தற்கொலை

DIN

ஆந்திரத்தில் மனைவியின் புகைப்படத்தை தவறாக சித்திரித்த கடன் செயலி முகவர்களால் கணவன் தற்கொலை செய்து கொண்டார்.

ஆந்திரப் பிரதேசத்தில் மீனவரான சுரேதா நரேந்திரா (21) என்பவரும் அகிலா தேவியும் (24) ஒன்றரை மாதத்திற்கு முன்னர்தான், காதல் திருமணம் செய்து கொண்டனர். இந்த நிலையில், கடந்த சில வாரங்களாக மோசமான வானிலையால் மீன்பிடி தொழில் பாதிக்கப்பட்டது. இதனையடுத்து, குடும்பச் செலவுகளுக்காக வேறு வழியில்லாமல் ஆன்லைன் செயலி மூலம் சுரேதா கடன் பெற்றார்.

மேலும், அந்தக் கடன்தொகையைச் செலுத்தாமல், சுரேதா காலம் தாழ்த்தி வந்துள்ளார். இதனால், கடனளித்த முகவர்கள் சுரேதா மனைவியின் புகைப்படத்தை நிர்வாணமாகச் சித்திரித்து, விலை என்று ஒன்றையும் குறிப்பிட்டு, அதனை சுரேதாவின் தொலைபேசி தொடர்பில் இருந்த அனைவருக்கும் அனுப்பியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, சுரேதாவின் தொலைபேசி தொடர்பில் இருந்த பலரும் சுரேதாவை தொடர்பு கொண்டு, இதுகுறித்து விசாரித்துள்ளனர். இதனையடுத்து, சுரேதா உடனடியாக அந்த கடன்தொகையை செலுத்தினார்.

இருப்பினும், கடன் முகவர்கள் தொடர்ந்து, அவரது மனைவியின் புகைப்படத்தை பகிர்ந்து வந்துள்ளனர். இதனால் மன உளைச்சலுக்கு ஆளாக்கப்பட்ட சுரேதா தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர்.

மற்றொரு சம்பவமாக, ஆந்திரத்திலேயே ரூ. 15,000 கடன் பெற்றிருந்த பெண் ஒருவர், இரண்டு நாள்களுக்கு முன்னர் தற்கொலைக்கு முயன்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அவர் 5 மடங்கு தொகையைத் திருப்பிச் செலுத்தியபோதிலும், அவரது புகைப்படம் சமூக வலைதளங்களில் பரப்பப்படும் என்று அச்சுறுத்தல் விடுக்கப்பட்டது. இதனால், விரக்தியடைந்த பெண், ஸ்ரீசைலத்தில் 20 அடி உயரத்தில் இருந்து குதித்து தற்கொலை முயற்சி செய்துள்ளார். இருப்பினும், நல்வாய்ப்பாக அவரைக் காவல்துறையினர் காப்பாற்றி விட்டனர்.

[தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு  நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050].

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜம்மு-காஷ்மீரில் 3 துருப்பிடித்த பீரங்கி குண்டுகள் கண்டுபிடிப்பு

காந்தப் பார்வை... ஸ்ருஷ்டி பன்னாட்டி!

டிஎஸ்பி சிராஜ்..! வெளிநாட்டில் 100 விக்கெட்டுகள்!

3 தேசிய விருதுகள்! பார்க்கிங் படக்குழுவை வாழ்த்திய கமல் ஹாசன்!

நிறைவடையும் தங்க மகள்... மகளே என் மருமகளே தொடரின் ஒளிபரப்பு அறிவிப்பு!

SCROLL FOR NEXT