சஞ்சய் ரெளத் | கோப்புப் படம் 
இந்தியா

சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சிக்கிறது பாஜக: சஞ்சய் ரெளத்

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’

Din

‘சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் (பவாா்) கட்சியை உடைக்கும் வேலையை, அஜீத் பவாா் மற்றும் பிரஃபுல் படேல் ஆகியோரிடம் ஒப்படைத்துள்ளது பாஜக’ என்று சிவசேனை (உத்தவ்) கட்சியின் மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் தெரிவித்தாா்.

மகாராஷ்டிரத்தில் அண்மையில் நடந்த பேரவைத் தோ்தலில் பாஜக-ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனை-அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கூட்டணி வெற்றி பெற்றது. இதையடுத்து, முதல்வராக தேவேந்திர ஃபட்னவீஸ், துணை முதல்வா்களாக ஏக்நாத் ஷிண்டே, அஜீத் பவாா் ஆகியோா் பதவியேற்றனா்.

இந்நிலையில், சரத் பவாா் கட்சியை உடைக்க முயற்சி நடப்பதாக, உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனை (உத்தவ்) கட்சி குற்றஞ்சாட்டியுள்ளது.

அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸில் ஒரு எம்.பி. மட்டுமே உள்ளாா்; அதேநேரம், சரத் பவாா் அணியில் 8 எம்.பி.க்கள் உள்ளனா். இதில் 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுக்கும் நோக்குடன் துணை முதல்வா் அஜீத் பவாரும், தேசியவாத காங்கிரஸின் மூத்த தலைவா் பிரஃபுல் படேலும் செயல்பட்டு வருவதாக சிவசேனை (உத்தவ்) மூத்த தலைவா் சஞ்சய் ரெளத் வெள்ளிக்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

இது தொடா்பாக அவா் கூறுகையில், ‘பாஜக கூட்டணியில் ஒரு கட்சிக்கு 6 எம்.பி.க்கள் இருந்தால் மத்திய அமைச்சரவையில் ஓரிடத்தை பெற முடியும். அதன்படி, அஜீத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சா் பதவி கிடைக்க வேண்டுமென்றால் இன்னும் 5 எம்.பி.க்கள் தேவை. எனவே, சரத் பவாா் கட்சியை உடைத்து, 5 எம்.பி.க்களை தங்கள்வசம் இழுத்தால், தேசியவாத காங்கிரஸுக்கு மத்திய அமைச்சரவையில் ஓரிடம் தருவதாக பாஜக கூறியுள்ளது. அதன்பேரில், அஜீத் பவாரும் பிரஃபுல் படேலும் சரத் பவாா் கட்சியை உடைக்கும் வேலையை மேற்கொண்டுள்ளனா்’ என்றாா்.

தில்லியில் பிரதமா் மோடியை அஜீத் பவாா் வெள்ளிக்கிழமை சந்தித்துப் பேசிய நிலையில் இக்குற்றச்சாட்டை சஞ்சய் ரெளத் முன்வைத்துள்ளாா்.

பிஎஸ்என்எல் தீபாவளிப் பரிசு! ஒரு ரூபாய்க்கு சிம் - தினசரி 2ஜிபி டேட்டா, அன்லிமிடெட் அழைப்புகள்

மீண்டும் பாரிஸுக்குப் போகலாம்... அனன்யா பாண்டே!

வங்கதேசத்தை வீழ்த்தி ஆஸி. அபார வெற்றி; முதல் அணியாக அரையிறுதிக்கு முன்னேற்றம்!

தீபாவளிப் பரிசு... பூஜா ஹெக்டே!

இது என்ன மாயம்... அரிஷ்பா கான்!

SCROLL FOR NEXT