FOLLOW US

ON GOOGLE DISCOVER

முகப்பு
இந்தியா

ஒரே நாடு; ஒரே தேர்தல் மசோதாக்கள் செவ்வாய்க்கிழமை தாக்கல்!

மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல்

Updated On : 16 டிசம்பர் 2024, 11:43 pm IST
பகிர்:

‘ஒரே நாடு; ஒரே தேர்தல்’ மசோதாக்கள் மக்களவையில் செவ்வாய்க்கிழமை(டிச. 17) தாக்கல் செய்யப்பட உள்ளன.

’ஒரே நாடு; ஒரே தோ்தல் திட்டம்’ குறித்து ஆய்வு செய்வதற்காக முன்னாள் குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் தலைமையில் உயா்நிலை குழு அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கையின்படி, ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான மசோதாக்களுக்கு மத்திய அமைச்சரவை கடந்த வியாழக்கிழமை(டிச. 12) ஒப்புதல் அளித்துள்ள நிலையில், எதிர்க்கட்சிகள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

இந்த நிலையில், ‘ஒரே நாடு; ஒரே தோ்தல்’ திட்ட அமலுக்கான இரு மசோதாக்களையும் மக்களவையில் செவ்வாய்கிழமை தாக்கல் செய்யப்பட உள்ளன.

Advertisement

Advertisement

இந்த மசோதாக்களில் புதிதாக சட்டப்பிரிவு 82(ஏ) இணைக்க முன்மொழியப்பட்டுள்ளது. மேலும், சட்டப்பிரிவு 83, சட்டப்பிரிவு 172, சட்டப்பிரிவு 327-களில் திருத்தம் மேற்கொள்ளவும் வழிவகை செய்கிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள்

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

Show comments