பிரதமர் மோடி-இலங்கை அதிபர் பேச்சுவார்த்தை 
இந்தியா

பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்திப்பு!

தில்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக பேச்சுவார்த்தை நிகழ்த்தி வருகிறார்.

DIN

தில்லியில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் அநுர குமார திசநாயக சந்திப்பு நிகழ்த்தினார்.

இந்தியா வந்துள்ள இலங்கை அதிபர் அநுர குமாரவுக்கு, தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று காலை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. இந்த நிகழ்வில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, பிரதமர் மோடி, மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

இதையடுத்து, ஹைதராபாத் இல்லத்தில் பிரதமர் மோடியுடன் இலங்கை அதிபர் சந்தித்தார். அப்போது, இரு பிரதமர்களும் பேச்சுவார்த்தை நிகழ்த்தினர்.

இதில் குறிப்பாக இந்தியா - இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகளை மேற்கொண்டனர்.

மேலும், மீனவர்கள் பிரச்னை, இலங்கை தமிழர் பிரச்னை உள்ளிட்ட பல்வேறு விவகாரங்கள் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து, பிகாரில் உள்ள புத்த கயவுக்குச் செல்ல உள்ளார். கடந்த செப்டம்பரில் நடைபெற்ற இலங்கை அதிபர் தேர்தலில் வெற்றிபெற்ற அந்த நாட்டின் புதிய அதிபராக அநுர குமார திசாநாயக பதவியேற்றார்.

கடந்த அக்டோபரில் இலங்கை சென்ற மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் அநுர குமாரவை சந்தித்து இந்தியா வருமாறு அழைப்பு விடுத்தார். இந்த அழைப்பை ஏற்று 3 நாள் பயணமாக அநுர குமார இந்தியாவுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்தார்.

அவரை தில்லி விமான நிலையத்தில் மத்திய இணையமைச்சர், எல். முருகன் உள்ளிட்டோர் வரவேற்றனர். அதிபராகப் பதவியேற்று அநுரகுமார இந்தியா வந்திருப்பது இது முதல் பயணமாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சோளிங்கரில் கேட்பாரற்று கிடந்த குழந்தை மீட்பு

மழை வருமோ... ராதிகா கௌஷிக்!

தீவிரமடையும் நெல் அறுவடைப் பணிகள்

உங்களை உணரும் கலை... தீப்தி சுனைனா!

ஹூண்டாய் புதிய வென்யூ கார் அறிமுகம் - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT