மாநிலங்களவை Sansad
இந்தியா

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு!

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவு...

DIN

நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் குளிர்கால கூட்டத்தொடர் நிறைவடைந்ததாக அவைத் தலைவர்கள் வெள்ளிக்கிழமை தெரிவித்தார்.

கடந்த மாதம் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது முதல் அதானி விவகாரம், மணிப்பூர் விவகாரம் உள்ளிட்டவை விவாதிக்க எதிர்க்கட்சிகள் வைத்த கோரிக்கைகள் தொடர்ந்து நிராகரிக்கப்பட்டதால், அமளி ஏற்பட்டு அவை நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டது.

இதனிடையே, செவ்வாய்க்கிழமை மக்களவையில் ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதா அறிமுகம் செய்யப்பட்டு விவாதம் நடைபெற்றது. விவாதத்தை தொடர்ந்து, நாடாளுமன்ற கூட்டுக் குழு ஆய்வுக்கு மசோதா அனுப்பப்பட்டது.

இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பிற்பகலில் மாநிலங்களவையில் பேசிய அமித் ஷா, அம்பேத்கரை அவமதித்ததாக இரண்டு நாள்களாக எதிர்க்கட்சிகள் போராட்டம் நடத்தினர்.

அமித் ஷா மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், உள்துறை அமைச்சர் பதவியை ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அவைகளில் எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.

குளிர்கால கூட்டத்தொடரின் கடைசி நாளான இன்று காலை அவைகள் கூடியவுடன், எதிர்க்கட்சி எம்பிக்கள் ஜெய் பீம் என்று முழக்கமிட்டனர்.

முழக்கங்களுக்கு இடையே ஒரே நாடு, ஒரே தேர்தல் மசோதாவை கூட்டுக்குழுவுக்கு அனுப்புவதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு காலை 11.10 மணிக்கே மக்களவை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டது.

தொடர்ந்து, மாநிலங்களவையில் கூட்டுக்குழுவுக்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உறுப்பினர்களின் பெயர் அறிவிக்கப்பட்டவுடன் குளிர்கால கூட்டத்தொடர் ஒத்திவைக்கப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஊழல் வழக்கில் ஷேக் ஹசீனாவுக்கு 10 ஆண்டுகள் சிறை: வங்கதேச நீதிமன்றம் தீா்ப்பு

பிகாா் சட்டப்பேரவைக்கு சக்கர நாற்காலியில் வந்த தேஜஸ்வி யாதவ்!

அரியலூரில் பறிமுதல் வாகனங்கள் பிப்.12-இல் ஏலம்

அச்சுறுத்தும் அழியாத ரசாயனங்கள்

விபத்து எழுப்பும் வினாக்கள்!

SCROLL FOR NEXT