கோப்புப் படம் 
இந்தியா

சொத்துத் தகராறு: தம்பி மீது டிராக்டர் ஏற்றிக் கொலை!

கர்நாடகத்தில் சொத்துத் தகராறால் தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது

DIN

கர்நாடகத்தில் சொத்துத் தகராறால் தம்பியைக் கொலை செய்த அண்ணன் கைது செய்யப்பட்டார்.

கர்நாடகத்தின் பெலாகவி மாவட்டத்தில் மாருதி பவிஹால் (30) என்பவருக்கும், அவரது தம்பியான கோபாலுக்கும் இடையில் சொத்து தொடர்பான தகராறு இருந்து வந்துள்ளது. இந்த நிலையில், சனிக்கிழமை (டிச. 21) கோபாலின் மீது டிராக்டரை ஏற்றி மாருதி கொலை செய்தார்.

டிராக்டர் ஏறியதில், சம்பவ இடத்திலேயே கோபால் பலியானார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, சம்பவ இடத்திற்கு விரைந்தனர்.

இதனைத் தொடர்ந்து, மாருதியை காவல்துறையினர் கைது செய்ததுடன், கோபாலின் உடலையும் உடற்கூறாய்வுக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், விசாரணை நடப்பதாகவும் கூறினர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆடிப்பெருக்கு : ஒகேனக்கல் காவிரிக் கரையில் சுவாமி சிலைகளுக்கு சிறப்பு பூஜை

நாளைய மின்தடை: தருமபுரி, சோலைக்கொட்டாய்

பிரிட்டனில் சட்டவிரோதமாக குடியேற உதவி: சமூக ஊடகங்களில் விளம்பரம் செய்தால் 5 ஆண்டுகள் சிறை

அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ. 9 லட்சம் மோசடி: ஒருவா் கைது

பாமக மாவட்ட நிா்வாகி கைதை கண்டித்து பென்னாகரத்தில் பாமகவினா் சாலை மறியல்

SCROLL FOR NEXT