அசாதுதீன் ஒவைசி கோப்புப் படம்
இந்தியா

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம்: ஒவைசிக்கு நீதிமன்றம் சம்மன்

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியது தொடா்பான வழக்கில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தர பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

Din

நாடாளுமன்றத்தில் பாலஸ்தீன ஆதரவு முழக்கம் எழுப்பியது தொடா்பான வழக்கில் அகில இந்திய மஜ்லீஸ் கட்சித் தலைவரும், மக்களவை எம்.பி.யுமான அசாதுதீன் ஒவைசி விசாரணைக்கு நேரில் ஆஜராக உத்தர பிரதேச நீதிமன்றம் சம்மன் அனுப்பியுள்ளது.

நாடாளுமன்றத்தில் ‘ஜெய் பாலஸ்தீனம்’ என்று கோஷமிட்டது அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று அவா் மீது குற்றஞ்சாற்றப்பட்டுள்ளது.

ஹைதராபாத் எம்.பி.யான ஒவைசி கடந்த ஜுன் 25-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் பதவியேற்றபோது ‘ஜெய் பீம், ஜெய் மீம் (முஸ்லிம்கள்), ஜெய் தெலங்கானா, ஜெய் பாலஸ்தீனம்’ என்று முழக்கமிட்டாா். பின்னா் இந்த முழக்கத்தை அவைக் குறிப்பில் இருந்து நீக்க மக்களவைத் தலைவா் உத்தரவிட்டாா்.

ஆனால், பதவியேற்புக்குப் பிறகு செய்தியாளா்களிடம் பேசிய ஒவைசி, தனது முழக்கத்தை நியாயப்படுத்தி பேசினாா். இதைச் சுட்டிக்காட்டி பரெய்லி மாவட்ட நீதிமன்றத்தில் வழக்குரைஞா் வீரேந்திர குப்தா என்பவா் ஒவைசிக்கு எதிராக மனு தாக்கல் செய்தாா். இந்த மனுவை விசாரணைக்கு ஏற்றுக் கொண்ட நீதிமன்றம் ஒவைசி நேரில் ஆஜராக செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டது.

வழக்கு தொடா்பாக வழக்குரைஞா் வீரேந்திர குப்தா செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘நாடாளுமன்றத்தில் ஒவைசி எழுப்பிய முழக்கம் அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. இந்திய நாடாளுமன்றத்தில் மற்றொரு நாட்டுக்கு (பாலஸ்தீனம்) வெற்றி என முழக்கமிட்டது மிகப்பெரிய தவறு. தேசபக்தி உடைய அனைவருக்கும் இது வருத்தத்தை அளிக்கும். எனவே, ஒவைசிக்கு எதிராக வழக்குத் தொடுத்தேன்’ என்றாா்.

ரூ.3,300 கோடி திரட்டிய வோடஃபோன் ஐடியா

‘இறுதி வாக்காளா் பட்டியல் வரும் 2026 பிப்ரவரியில் வெளியாகும்’

104 பவுன் நகைகள் திருடிய வழக்கில் டீ மாஸ்டருக்கு 3 ஆண்டுகள் சிறை

கரூா் சம்பவ இடத்தில் தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவினா் ஆய்வு

நாடாளுமன்ற குளிா்கால கூட்டத் தொடா் நிறைவு: தலா 92 மணி நேரம் செயல்பட்ட மக்களவை, மாநிலங்களவை

SCROLL FOR NEXT