இந்தியா

பள்ளத்தில் கவிழ்ந்த ராணுவ வாகனம்: 5 வீரர்கள் பலி!

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

DIN

ஜம்மு - காஷ்மீரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் விபத்துக்குள்ளானதில் 5 வீரர்கள் உயிரிழந்தனர்.

ராணுவ வீரர்கள் சென்ற வாகனம் 350 அடி பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததில், பலர் படுகாயம் அடைந்துள்ளனர். படுகாயமடைந்தவர்கள் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்லப்பட்டுள்ளனர்.

ஜம்மு - காஷ்மீரின் பூஞ்ச் மாவட்டத்திலுள்ள பலோனி பகுதியிலிருந்து ராணுவ வீரர்களுடன் சென்ற வாகனம், மெந்தர் பகுதியில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்து இன்று (டிச. 24) விபத்துக்குள்ளானது.

350 பள்ளத்தில் ராணுவ வாகனம் கவிழ்ந்ததில், 5 வீரர்கள் பலியாகினர். படுகாயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

விபத்து குறித்து தகவல் அறிந்த விரைவுப் படையினர் மருத்துவ உதவிகளுடன் மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜம்மு - காஷ்மீரில் ரஜெளரி மாவட்டத்தில் நவ. 2ஆம் தேதி ராணுவ வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், ஒரு வீரர் உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்க | சம்பல் வன்முறை: இதுவரை 47 பேர் கைது!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லீக்ஸ் கோப்பை தோல்விக்குப் பழிதீர்த்த இன்டர் மியாமி..! மெஸ்ஸி ஆட்ட நாயகன்!

சுதந்திர இந்தியாவின் 100 -வது வயதிலும் மோடி பணியாற்ற வேண்டும்! முகேஷ் அம்பானி

பெரியார் சிலைக்கு விஜய் மரியாதை! | TVK Vijay

ரயில்வே மருத்துவமனைகளில் வேலை வேண்டுமா?

பெண்ணல்ல வீணை... அனுபமா பரமேஸ்வரன்!

SCROLL FOR NEXT