கோப்புப்படம் Express
இந்தியா

நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய மருத்துவர்!

நடுவானில் முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் மருத்துவர் காப்பாற்றியது பற்றி...

DIN

பெங்களூருவில் இருந்து தில்லி சென்ற விமானத்தில் உடல்நலக் குறைவு ஏற்பட்ட முன்னாள் ராணுவ வீரரை, அதே விமானத்தில் பயணித்த மருத்துவர் காப்பாற்றியுள்ளார்.

இந்த சம்பவம் பெங்களூருவில் இருந்து தில்லி நோக்கி ஞாயிற்றுக்கிழமை காலை 5.45 மணிக்கு புறப்பட் இண்டிகோ நிறுவனத்தின் 6இ 6021 என்ற விமானத்தில் நடைபெற்றது.

உடல்நலம் பாதிக்கப்பட்டவரை மீண்டும் இயல்பு நிலைக்கு மருத்துவர் கொண்டு வந்ததால், அவசர தரையிறக்கம் தவிர்க்கப்பட்டது.

முன்னாள் ராணுவ வீரரின் உயிரைக் காப்பாற்றிய சண்டீகரின் மருத்துவக் கல்வி மற்றும் ஆராய்ச்சி முதுகலை நிறுவனத்தின் பேராசிரியரும் மருத்துவருமான மொஹிந்திரா ‘தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நிறுவனத்துக்கு பேட்டி அளித்துள்ளார்.

அவர் தெரிவித்ததாவது:

“பெங்களூருவில் இருந்து புறப்பட்டு சுமார் 45 நிமிடத்தில், மருத்துவர் யாரேனும் விமானத்தில் இருந்தால் பயணிக்கு உதவ முன்வருமாறு விமானக் குழுவினர் கேட்டனர்.

நான் உடனடியாக அவர்களை அணுகினேன். அந்த பயணி, அசௌகரியம், தலைவலி மற்றும் உடலின் இடது பக்கத்தில் பலவீனம் இருப்பதாக கூறினார்.

அவருக்கு ஏற்பட பலவீனமானது பக்கவாதத்தாலும் ஏற்படக் கூடியது என்பதால், மிக எச்சரிக்கையுடன் சிகிச்சை மேற்கொள்ள வேண்டியிருந்தது. அவர் நீரிழிவு நோயாளி என்றும் மருந்துகள் எடுத்துக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்தார்.

எனவே, ரத்த சக்கரை அளவு குறைந்திருக்கலாம் என்று சந்தேகித்தேன். அடுத்தகட்டமாக, வலிப்பு, சுயநினைவு இழப்பு போன்றவைக்கு வழிவகுக்கும் என்பதால், உடனடியாக தண்ணீரில் சக்கரை கலந்து கொடுக்குமாறு விமான ஊழியர்களிடம் தெரிவித்தேன்.

அதனை குடித்த 15 நிமிடங்களில் அவர் இயல்பு நிலைக்கு திரும்பினார், தில்லி விமான நிலையம் சென்றடையும் வரை அவரின் அருகிலேயே அமர்ந்தேன்.

அவரின் சொந்த ஊர் மைசூரு என்றும், தற்போது பெங்களூருவில் வசிப்பதாகவும் கூறினார். தில்லிக்கு அவரும் அவரது மனைவியும் ஒரு குழுவினருடன் சுற்றுலா சென்று கொண்டிருப்பதாக தெரிவித்தார்.

மேலும், அவரிடம் விரைவில் மருத்துவரை சந்தித்து மருந்துகளை மாற்றுமாறு அறிவுறுத்தினேன். ஒருவர் நீரிழிவு நோய்க்காக வழக்கமாக மருந்துகள் மற்றும் இன்சுலின் உட்கொண்டால் இத்தகைய நிலை ஏற்படலாம். ரத்தச் சர்க்கரைக் குறைவின் எச்சரிக்கை அறிகுறிகளைப் பற்றி நோயாளிகளுக்குக் கற்பிக்கப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

மானாமதுரை நகா் காங்கிரஸ் தலைவா் நியமனம்

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

அறச்சலூா் ஓடாநிலையில் தீரன் சின்னமலை ஆடிப்பெருக்கு விழா

ஆடிப்பெருக்கு: பவானிசாகா் அணைப் பூங்காவில் குழந்தைகள், பெண்கள் கொண்டாட்டம்

SCROLL FOR NEXT