கர்நாடகத்தில் பாஜக எம்எல்ஏ மீது முட்டை வீசி தாக்குதல் நடத்தப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
பெங்களூருவில் நடைபெற்ற முன்னாள் பிரதமர் வாஜ்பாய்யின் பிறந்தநாள் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில், முன்னாள் அமைச்சரும், கர்நாடக பாஜக எம்எல்ஏவுமான முனிரத்னா கலந்துகொண்டார்.
முன்னாள் பிரதமர் மறைந்த அடல் பிஹாரி வாஜ்பாய்யின் பிறந்தநாளை முன்னிட்டு பெங்களூரின் மேற்குப் பகுதியில் அமைந்துள்ள லக்கெரே, லட்சுமிதேவி நகர் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முனிரத்னா பங்கேற்ற போது அடையாளம் தெரியாத நபர்கள் முட்டைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
இந்த சம்பவத்திற்குப் பிறகு, முனிரத்னா எம்எல்ஏ மீது காங்கிரஸ் கட்சியினர் முட்டைகளை வீசியதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.
பொது நிகழ்வில் கலந்து கொண்டு திரும்பிச் செல்லும் போது தாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இந்தச் சம்பவம் தொடர்பான கேமராக் காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.