முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நினைவிடம் கட்டக்கூடிய இடத்தில் நடத்த வேண்டும் என்று பிரதமர் மோடியை காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வலியுறுத்தியுள்ளார்.
முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உடல்நலக் குறைவு காரணமாக நேற்று (டிச. 26) இரவு தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார். அவரின் மறைவுக்கு அரசியல் கட்சித் தலைவர்கள், பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவருக்கு நாளை அரசு மரியாதையுடன் இறுதிச் சடங்கு நடைபெறவுள்ளன.
இந்த நிலையில், காங்கிரஸ் பொதுச்செயலர் மல்லிகார்ஜுன கார்கே, பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், “டாக்டர் மன்மோகன் சிங்கின் இறுதிச் சடங்குகளை நாளை அவரது இறுதிச்சடங்கு நினைவிடமாகவிருக்கும் இடத்தில் நடத்த வேண்டும் என்று இன்று காலை தொலைபேசி உரையாடலில் கோரிக்கை வைத்தேன்.
இது அரசியல் தலைவர்கள் மற்றும் முன்னாள் பிரதமர்களின் இறுதிச் சடங்குகள் நடைபெறும் இடத்திலேயே அவர்களின் நினைவிடங்களை அமைப்பது நமது பாரம்பரியத்திற்கு ஏற்ப உள்ளது. மன்மோகன் சிங் நாட்டு மக்களின் மனதில் மிகவும் மரியாதைக்குரிய இடத்தைப் பெற்றுள்ளார். மேலும் அவரது பங்களிப்புகள் மற்றும் சாதனைகள் தனித்துவமானவை” எனக் குறிப்பிடுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.