அகிலேஷ் யாதவ் PTI
இந்தியா

லிங்கம் உள்ளதால் யோகி இல்லத்திலும் அகழாய்வு செய்ய வேண்டும்: அகிலேஷ்

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் கீழும் சிவலிங்கம் உள்ளது என்றார் அகிலேஷ் யாதவ்.

DIN

உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் கீழும் சிவலிங்கம் உள்ளது என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் இன்று (டிச. 29) தெரிவித்தார். அவரின் இல்லத்திலும் அகழாய்வு செய்யும் பணிகளில் ஈடுபட வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னெளவில் செய்தியாளர்களுடன் பேசிய அவர்,

பாஜக ஆட்சியில் அழிவு ஏற்பட்டுள்ளதே தவிர, உத்தரப் பிரதேசத்தில் வளர்ச்சி ஏற்படவில்லை. அப்பாவி மக்களின் இல்லங்கள் புல்டோசர் கொண்டு இடிக்கப்படுகின்றன. பணவீக்கம், வேலைவாய்ப்பின்மை மற்றும் ஊழல் நிறைந்து காணப்படுகிறது. விவசாயிகள் வஞ்சிக்கப்படுகின்றனர். இளைஞர்கள் மகிழ்ச்சியாக இல்லை.

பொதுமக்களை பிரச்னைகளில் இருந்து திசைதிருப்பும் வகையில் லிங்கம் உள்ளதாகக் கூறி பல கட்டடங்களை இடித்து அகழாய்வு நடத்துகிறது. முதல்வர் யோகி ஆதித்யநாத் இல்லத்தின் கீழும் லிங்கம் உள்ளதாக நாங்கள் நம்புகிறோம். அங்கும் அகழாய்வுப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

அரசிடம் நிலம் இல்லை. தற்போது விவசாயிகளை ஏமாற்றும் பணிகளில் பாஜக அரசு ஈடுபட்டுள்ளது. விவசாயிகளிடமிருந்து 1.5 லட்சம் ஏக்கர் நிலங்களைப் பெறவுள்ளது. முதலீடு என்ற பெயரில் மக்களை ஏமாற்றுகிறது எனக் குறிப்பிட்டார்.

இதையும் படிக்க | சொல்லப் போனால்... மன்மோகன் சிங்: கருணை காட்டும் வரலாறு!

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வசியக்காரி... சோனம் பஜ்வா!

பைக்கிலிருந்து தவறி விழுந்த நிலத்தரகா் உயரிழப்பு

அரக்கோணம் ஸ்ரீசுந்தர விநாயகா் கோயிலில் செப். 7-இல் பாலாலயம்

பேருந்தில் ஆவணமின்றி கொண்டு வந்த ரூ. 59 லட்சம், 4 வெள்ளிக் கட்டிகள் பறிமுதல்

கொள்ளை நிலா... ஐஸ்வர்யா ராஜேஷ்

SCROLL FOR NEXT