பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்படும் சிறார்கள். 
இந்தியா

பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் சிறார்கள்!

தெலங்கானாவில் நடக்கும் பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் குறித்து...

DIN

தெலங்கானாவில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களில் 70% பேர் சிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது.

தெலங்கானா மாநில காவல்துறையினர் வெளியிட்ட பாலியல் வன்கொடுமை குற்றச் சம்பவங்கள் தொடர்பான ஆண்டறிக்கையில் இந்த ஆண்டில் மட்டும் 2,945 பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் பதிவானதாகத் தெரிய வந்துள்ளது.

இதில், பாதிக்கப்பட்டவர்களில் 87 பேர் 15 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், 1970 பேர் 15 முதல் 18 வயதிற்குட்பட்டவர்கள் என்றும், 888 பேர் 18 வயதிற்கு மேற்பட்டவர்கள் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை 2023 ஆம் ஆண்டை விட 28.9% (2,284) அதிகமாகும்.

மேலும், பாதிக்கப்பட்டவர்களில் 99.2% (2,922) பேர் தெரிந்த நபர்களாலேயே பாலியல் துன்புறுத்தலால் பாதிக்கப்பட்டதாக காவல்துறை டிஜிபி ஜிதேந்தர் தெரிவித்தார்.

இந்த வழக்குகளில் 940 குற்றவாளிகள் வழக்குப்பதிவு செய்யப்பட்ட 8 மணி நேரத்தில் கைது செய்யப்பட்டனர். மேலும், பாலியல் வன்கொடுமை மற்றும் போக்சோ வழக்குகளில் பாதிப்படைந்த 428 பேருக்கு இதுவரை நிவாரணத் தொகையாக ரூ. 5.42 கோடி வழங்கப்பட்டதாக டிஜிபி கூறினார்.

இந்த அறிக்கையில் குறிப்பிட்டுள்ள தகவல்களின்படி 2024-ல் மட்டும் 1,525 கடத்தல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதில் 82% பேர் சிறார்கள் என்ற அதிர்ச்சித் தகவலும் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வீரப்பன் தேடுதல் வேட்டை: இழப்பீடு தொகை அரசு பணம் அல்ல; மக்கள் பணம்: உயர் நீதிமன்றம்

கண்களால் கைது செய்... ஆசியா பேகம்!

கிஸ் படத்தின் ஓடிடி வெளியீட்டுத் தேதி! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!

பிகாரில் காட்டாட்சியைத் தடுக்க தாமரை சின்னத்துக்கு வாக்களியுங்கள்: அமித் ஷா

திமுக-வில் இணைந்தார் அதிமுக எம்எல்ஏ மனோஜ் பாண்டியன்! | DMK | ADMK

SCROLL FOR NEXT