மோடிக்காக அழைப்புப் பெற அமெரிக்கா சென்றாரா ஜெய்சங்கர்? சுவாமி கிண்டல்!
டிரம்ப் பதவியேற்பு விழா அழைப்பிதழ் பெற அமெரிக்கா சென்ற ஜெய்சங்கர் என்று பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி
டிரம்ப் பதவியேற்பு விழாவிற்கு அழைப்பிதழ் பெற பிரதமர் மோடி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரை அமெரிக்கா அனுப்பியிருப்பதாக சுப்பிரமணியன் சுவாமி குற்றம்சாட்டியிருக்கிறார்.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், டிச.24-29 வரை அமெரிக்காவுக்கு அரசுமுறைப் பயணமாக சென்றுள்ளார். அமெரிக்காவின் புதிய அதிபராக டொனால்ட் டிரம்ப் தேர்வு செய்யப்பட்ட பிறகு, ஜெய்சங்கர், அந்நாட்டுக்கு முதல் முறையாக பயணம் மேற்கொண்டிருந்தார்.
இந்த பயணம் குறித்து பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணியன் சுவாமி கடுமையாக விமரிசித்துள்ளார். இது குறித்து அவர் தன்னுடைய எக்ஸ் பக்கத்தில், பிரதமர் மோடி, மத்திய அமைச்சர் ஜெய்சங்கரை அமரிக்காவுக்கு அனுப்பி, தனக்கு, டிரம்ப் பதவியேற்பு விழாவில் பங்கேற்பதற்கான அழைப்பிதழைப் பெற்று வருமாறும், இல்லாவிட்டால் உங்கள் வேலை பறிபோகும் என்று கூறியிருப்பதாகவும் பதிவிட்டுள்ளார்.
Advertisement
Advertisement
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் டிரம்ப் ஜனவரி 20ஆம் தேதி பதவியேற்கவிருக்கிறார்.
ஆனால், இதுவரை, டொனால்ட் டிரம்ப்புக்கு மோடியை அழைப்பதற்கான எண்ணம் ஏற்படவில்லை என்றும் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருக்கிறார் சுப்ரமணியன் சுவாமி.
மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரின் பயணத்துக்கு இடையே, இந்தியாவின் வெளியுறவுத் துறை செயலர் விக்ரம் மிஸ்ரி, திங்கள்கிழமை, அமெரிக்க அதிகாரிகளுடன் இருதரப்பு உறவு, சர்வதேச விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.