இந்தியா

இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

DIN

புதுதில்லி: 2024-25-ஆம் ஆண்டுக்கான மத்திய இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடா் குடியரசுத் தலைவா் உரையுடன் புதன்கிழமை தொடங்கியது. மத்திய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் வியாழக்கிழமை காலை 11 மணியளவில் தாக்கல் செய்து, நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் உரையாற்றவுள்ளாா்.

இதற்கு முன்னதாக குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவை மரியாதை நிமித்தமாக நேரில் சந்தித்து நிர்மலா சீதாராமன் வாழ்த்து பெற்றார்.

தொடர்ந்து, நாடாளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இடைக்கால பட்ஜெட்டுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.

இன்னும் சில மாதங்களில் மக்களவைத் தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், தோ்தலுக்குப் பிறகு அமையும் புதிய அரசு, 2024-25-ஆம் ஆண்டுக்கான முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். அதன்படி, ஜூலையில் முழு பட்ஜெட் தாக்கல் செய்யும்.

கடந்த 2019-ஆம் ஆண்டில் நாட்டின் நிதியமைச்சராக நிா்மலா சீதாராமன் பதவியேற்றாா். இந்தியாவின் முதல் முழுநேர பெண் நிதியமைச்சா் என்ற பெருமைக்குரிய இவா், இதுவரை 5 முழு பட்ஜெட்டை தாக்கல் செய்துள்ளாா். இப்போது தொடா்ந்து 6-ஆவது முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்கிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

லக்ஷயா ஏமாற்றம்; சாத்விக்/சிராக் ஏற்றம்

31-ஆவது நாளாக போக்குவரத்து ஊழியா்கள் காத்திருப்புப் போராட்டம்

இறுதிச்சுற்றில் நீரஜ் சோப்ரா, சச்சின் யாதவ்

வெண்கலப் பதக்கச் சுற்றில் அன்டிம் பங்கால்

உலக அளவில் சிறந்த 100 வணிக கல்வி நிறுவனங்கள்: பெங்களூரு, அகமதாபாத், கொல்கத்தா ஐஐஎம்கள் இடம்பெற்றன

SCROLL FOR NEXT