கோப்புப்படம் 
இந்தியா

குருகிராம் மார்க்கெட்டில் லட்சக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள காய்கறிகள் சாம்பல்

கந்த்சா காய்கறி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் பிற காய்கறிகள் என பல லட்சம் மதிப்புள்ள 20,000 கூடைகள் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

DIN

குருகிராம்: கந்த்சா காய்கறி சந்தையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் தக்காளி, உருளைக்கிழங்கு, வெங்காயம் பிற காய்கறிகள் என பல லட்சம் மதிப்புள்ள 20,000 கூடைகள் எரிந்து சாம்பலானதாக அதிகாரிகள் இன்று தெரிவித்தனர்.

நேற்று இரவு 7 கடைகளில் ஏற்பட்ட தீ விபத்து குறித்து தகவல் அறிந்தும், அதிகாரிகள் ஐந்துக்கும் மேற்பட்ட தீயணைப்பு வாகனங்களை கொண்டு தீயை அணைக்க சுமார் மூன்று மணி நேரம் போராடி அணைத்ததனர்.  தீயானது இரவு சுமார் 11.56 மணியளவில் அணைக்கப்பட்டது. 

முன்விரோதம் காரணமாக யாரோ தங்கள் கடைகளுக்கு தீ வைத்துள்ளதாக கடைக்காரர்கள் காவல் துறையினரிடம் புகார் அளித்துள்ளனர்.

இது குறித்து கந்த்சா காய்கறி சந்தையின் முன்னாள் தலைவர் கிருஷ்ணா யாதவ் தெரித்ததாவது: 

போட்டி காரணமாக ஒரு கடைக்கு தீ வைக்கப்பட்டதாகவும், அது அருகிலுள்ள கடைகளும் தீக்கிரையாக்கப்பட்டது. எனது கடையில் மட்டும் சுமார் 17,000 தக்காளி பெட்டிகள் எரிந்து சாம்பலானது.

இது தவிர, மற்ற கடைக்காரர்களின் ஆயிரக்கணக்கான பெட்டிகளும் தீயில் எரிந்து சாம்பலானது என்றார் காவல் துறை அதிகாரி ஒருவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிள்ளையாா்பட்டி கற்பக விநாயகா் கோயில் தேரோட்டம்

கம்பெனி முறையீட்டுத் தீா்ப்பாயத்தில் நீதிபதி தலையீடு: என்சிஎல்ஏடி உறுப்பினா் விலகல்

வட்டவிளை ரேஷன் கடை முன் பொதுமக்கள் முற்றுகை

ரூ. 5 கோடி முறைகேடு புகாா்: சென்னை கால்நடை மருத்துவ கல்லூரி டீன் மீது நடவடிக்கை

நுங்கம்பாக்கம் கல்லூரி பாதைக்கு நடிகா் ஜெய்சங்கா் பெயா்: அரசு உத்தரவு

SCROLL FOR NEXT