இந்தியா

தனலட்சுமி வங்கியின் நிகர லாபம் குறைவு!

DIN

புதுதில்லி: தனலட்சுமி வங்கியின் நிகர லாபம் 2023 டிசம்பருடன் முடிவடைந்த மூன்றாவது காலாண்டில் பல மடங்கு சரிவடைந்து ரூ.3 கோடி ரூபாயாக உள்ளது.

கடந்த ஆண்டு இதே காலாண்டில் ரூ.22 கோடி நிகர லாபம் ஈட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

நடப்பு நிதியாண்டின் மூன்றாவது காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் ரூ.312 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.343 கோடியானது. அதே வேளையில் வங்கியின் வட்டி வருமானம் ரூ.276 கோடியிலிருந்து அதிகரித்து ரூ.308 கோடியானது.

வங்கியின் மொத்த செயல்படாத சொத்துக்கள் டிசம்பர் 2023 இறுதிக்குள் மொத்த கடன்களில் 4.81 சதவிகிதமாகக் குறைந்துள்ளது. இது ஒரு வருடத்திற்கு முன்பு 5.83 சதவிகிதமாக இருந்தது.

இதேபோல் வங்கியின் நிகர வாராக் கடன் 1.82 சதவிகிதத்திலிருந்து 1.27 சதவிகிதமாக குறைந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

செங்கல்பட்டு சாலை விபத்தில் 5 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

'ஊழலை நீக்கும் வாஷிங் மெஷின்' - பாஜகவைக் கிண்டலடிக்கும் ஆம் ஆத்மி!

‘தரம் தாழ்ந்த விமர்சனங்கள் காயப்படுத்துகின்றன..’: ஜி.வி.பிரகாஷ்

பம்பை: வாகன நிறுத்தத்திற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்!

சென்னை சென்ட்ரல் - விமான நிலையம் மெட்ரோ சேவை சீரானது!

SCROLL FOR NEXT