மம்தா பானர்ஜி | PTI 
இந்தியா

காங்கிரஸ் 40 தொகுதிகளில் கூட வெற்றி பெறாது: மம்தா பானர்ஜி

இந்தியா கூட்டணியில் விரிசல் விழுந்த நிலையில் காங்கிரஸ் கட்சியைக் குறித்து பேசியுள்ளார் மம்தா பானர்ஜி.

DIN

கொல்கத்தா: ஹிந்தி பேசும் மாநிலங்களில் பாஜகவை எதிர்கொள்ள காங்கிரஸ் திணறுவதாகவும் புராதனமான கட்சி வருகிற மக்களவை தேர்தலில் 40 தொகுதிகள் கூட பெறாது எனவும் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி விமர்சித்துள்ளார்.

ஆறு மாநிலங்கள் வழியாக காங்கிரஸ் கட்சி மேற்கொள்ளும் பாரத் ஜோதா யாத்திரையின் பகுதியாக மேற்கு வங்கத்தில் பயணம் மேற்கொள்ளப்பட்டது. என்பது பறவைகள் வலசை போவதுபோல புகைப்படம் எடுத்து கொள்வதற்கான வாய்ப்பு இது என மம்தா கடுமையாக சாடியுள்ளார்.

அவர், “காங்கிரஸை நாடு முழுவதும் 300 தொகுதிகளில் நிற்க முன்மொழிந்தேன். அவர்கள் மறுத்துவிட்டனர். இப்போது மாநிலத்தில் முஸ்லீம் வாக்குகளைப் பெற வந்திருக்கிறார்கள். 300 தொகுதிகளில் போட்டியிட்டாலும் அவர்கள் 40 தொகுதி கூட வெற்றிபெறுவார்களா எனத் தெரியவில்லை. நாங்கள் கூட்டணிக்கு வாய்ப்பு கொடுத்தோம். அவர்கள் தான் மறுத்திருக்கிறார்கள். மேற்கு வங்கத்தில் இரண்டு தொகுதிகள் கொடுத்தோம். இப்போது 42 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறார்கள். அதுமுதல் அவர்களுக்கும் எங்களுக்கும் எந்த பேச்சுவார்த்தையும் இல்லை” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு மேற்கு வங்க மாநிலத்துக்கு அளிக்க வேண்டிய நிலுவையை தரக் கோரி நடத்திய போராட்டத்தில் இவ்வாறு மம்தா பேசியுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வலையில் சிக்கிய 150 கிலோ எடை ஆமை: கடலில் விட்ட மீனவர்

ஜம்மு ரயில் நிலையத்தை தகர்க்க புறா மூலம் வெடிகுண்டு மிரட்டல்?

பழமொழி மருத்துவம்

பேரறிஞர் அண்ணா (வாழ்க்கை வரலாறு)

தமிழர் பண்பாடு மறைவனவும் மீள்வனவும்

SCROLL FOR NEXT