இந்தியா

பொது சிவில் சட்டத்தின் மீதான விவாதம் எப்போது?

DIN

புது தில்லி: உத்தரகண்ட் மாநில முதல்வர் புஷ்கர் சிங் தாமி, சிறப்பு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் பொது சிவில் சட்டம் முன்வைக்கப்பட்டு விவாதம் நடைபெறும் எனத் தெரிவித்துள்ளார்.

சட்டத்தின் வரைவை ஓய்வுபெற்ற நீதிபதி ரஞ்சனா பிரகாஷ் தலைமையிலான குழு இன்று (பிப்.2) முதல்வரிடம் சமர்பித்ததைத் தொடர்ந்து தாமி செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தாவது:

குழு 749 பக்களவிலான யுசிசி சட்ட வரைவை இன்று சமர்பித்துள்ளது. பிப்.6 ஆம் தேதி சட்டப்பேரவையில் இந்த வரைவு விவாதத்துக்காக முன்வைக்கப்படும். மாநிலத்தின் சட்டத்துறை மற்றும் நாடாளுமன்ற விவகார துறை இந்த வரைவை மேற்பார்வையிடும் எனத் தெரிவித்துள்ளார்.

விவாதத்துக்கு பிறகு சட்டம் அமலாகும் எனத் தெரிகிறது. தாமி பேசும்போது பாஜக சொன்னதுபோலவே ஆட்சிக்கு வந்ததும் சட்டத்தை நிறைவேற்றியுள்ளதாகவும் கட்சி தலைமையின் உந்துதலால் சாத்தியமானதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது சிறப்பாக அமையும் எனவும் மற்ற மாநிலங்கள் இதனை பின்தொடரும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளார் தாமி. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சித்திரமே... சித்திரமே...

இருவர் அரைசதம்: லக்னௌ அணிக்கு 209 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேபிடல்ஸ்!

சுந்தரி.. கேப்ரெல்லா!

தீராக் காதல்! ஜான்வி கபூர்..

கடைசி டி20: பாகிஸ்தானுக்கு 179 ரன்கள் இலக்கு நிர்ணயித்த அயர்லாந்து!

SCROLL FOR NEXT