அரோமா தொழிற்சாலையில் தீ விபத்து 
இந்தியா

அரோமா ஆலையில் தீ விபத்து: 2 பேர் பலி, 12 பேர் மாயம்!

ஹிமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

DIN

ஹிமாசலப் பிரதேசத்தின் சோலன் மாவட்டத்தில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டுள்ளது. 

சோலன் மாவட்டத்தில் பாடி பகுதியில் வாசனைத் திரவியம் தயாரிக்கும் அரோமா தொழிற்சாலையில் வெள்ளிக்கிழமை 2.45-க்கு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 பேர் பலியானதாக முதல்கட்ட விசாரணை தெரிய வந்தது. 12 பேர் மாயமாகியுள்ளனர். 

தீ விபத்தையடுத்து என்.ஆர்.அரோமா தொழிற்சாலையின் தலைவர் சந்திரசேகர் கைது செய்யப்பட்டதாக போலீஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து நடைபெற்றபோது சுமார் 50 பேர் ஆலையில் பணியிலிருந்தாக கூறப்படுகிறது. 5 பேர் காயமடைந்த நிலையில், இவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

தீ விபத்து நடைபெற்ற இடத்தில் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றது. இந்த தீ விபத்துக்கு முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு இரங்கல் தெரிவித்துள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

உன்னைத்தானே... மால்வி மல்ஹோத்ரா!

மனம் மாறா... பாவனா!

ஜெ.பி.நட்டாவுடன் நயினார் நாகேந்திரன் ஆலோசனை!

அன்புத்தேனே... நிகிதா தத்தா!

மீண்டும் மீண்டும் வேண்டும்... கல்யாணி பிரியதர்ஷன்!

SCROLL FOR NEXT