அத்வானி (கோப்பிலிருந்து) 
இந்தியா

எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது: பிரதமர் மோடி

பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

PTI


புது தில்லி: பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

மேலும், பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டதற்கு அத்வானிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்தேன் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டிருப்பது எனக்கு உணர்ச்சிப்பூர்வமான தருணம் என்றும், இந்தியாவின் வளர்ச்சிக்கு எல்.கே. அத்வானியின் பங்களிப்பு மிகச் சிறப்பானது என்றும் மோடி கூறியுள்ளார்.

அடிமட்ட தொண்டன் முதல் துணை பிரதமர் வரை பல்வேறு பதவிகளில் பணியாற்றி நாட்டுக்கு சேவையாற்றியுள்ளார். உள்துறை மற்றும் தகவல் தொடர்புத் துறை அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார் என்று பிரதமர் மோடி, அத்வானிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் அவரது விவாதங்கள் எப்பொழுதும் முன்னுதாரணமாக இருக்கும்.  மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு (96) இந்த விருது வழங்கப்படும் தகவலை பகிர்ந்து கொள்வதில் மிகவும் மகிழ்ச்சி அடைவதாகவும் பிரதமர் கூறினார்.

90ஆம் ஆண்டுகளில் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையில் கூட்டணி அரசாக முதல்முறையாக மத்தியில் ஆட்சிக்கு வந்தபோது, ​​கட்சியின் எழுச்சியை வடிவமைத்த பெருமைக்குரிய மற்றும் பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக இருந்தவர் எல்.கே. அத்வானி என்றும் மோடி  தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மோடியின் கைப்பாவையாக மாறிய தேர்தல் ஆணையம்: கார்கே குற்றச்சாட்டு!

டிஐஜி வருண் குமாருக்கு எதிராக அவதூறு கருத்து தெரிவிக்க சீமானுக்கு இடைக் காலத் தடை!

அமர்நாத் யாத்திரை செல்ல நாளைமுதல் அனுமதியில்லை! காஷ்மீர் நிர்வாகம் அறிவிப்பு

ஏ சான்றிதழ் பெற்ற ரஜினி திரைப்படங்கள்!

எங்கள் கூட்டணியிலிருந்து எந்த கட்சியும் வெளியேறாது: அமைச்சர் கே.என்.நேரு

SCROLL FOR NEXT