இந்தியா

நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை தேசம் என்றும் மறவாது -அத்வானிக்கு பிரதமர் மோடி புகழாரம்

DIN

சம்பல்பூர் : ஒடிசாவில் ரூ.68,000 கோடி மதிப்பிலான பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி இன்று(பிப்.3) அடிக்கல் நாட்டினார்.

இந்த விழாவில் ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக், ஆளுநர் ரகுபர் தாஸ், மத்திய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் ஆகியோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, பாஜக மூத்த தலைவர் எல்.கே. அத்வானிக்கு பாரத ரத்னா விருது வழங்கி கௌவுரவிக்கப்படும் என பிரதமர் நரேந்திர மோடி இன்று(பிப்.3) அறிவித்தார். இந்நிலையில், சம்பல்பூரில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, பாஜக தலைவர் அத்வானி நாட்டிற்காக ஆற்றிய சேவைகளை வெகுவாகப் பராட்டினார்.    

இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி கூறியதாவது, “அத்வானியின் பணிகளும் அவர் அற்றிய சேவைகளும் ஊக்கமளிப்பதாக உள்ளன. அத்வானிக்கு வழங்கப்படும் இந்த மரியாதை, நாட்டிற்காக வாழ்க்கையை அர்ப்பணித்தவர்களை இந்த தேசம் என்றும் மறவாது என்ற பொன்மொழிக்கு சான்றாக உள்ளது.

லால் கிருஷ்ணா அத்வானியின் அன்பையும் வழிகாட்டலையும் தொடர்ந்து நான் பெற்று வருவதை, எனது அதிர்ஷ்டமாக உணர்கிறேன்” என்று தெரிவித்தார். 

துணைப் பிரதமர் பதவி முதல் பல்வேறு பதவிகளை வகித்துள்ள அத்வானி, பாஜகவின் நீண்டகால தேசிய தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

’முஸ்லிம்’ வார்த்தையை நீக்கிய தூர்தர்ஷன்!

வேட்பாளர்களும் வழக்குகளும்!

கொடைக்கானலில் 61 வது மலர் கண்காட்சி,கோடை விழா தொடங்கியது

கேப்டன்சியில் அசத்தும் பாட் கம்மின்ஸ்!

பாண்டியன் ஸ்டோர்ஸ் தனம் அண்ணியா இது!

SCROLL FOR NEXT