இந்தியா

பஞ்சாப், ஹரியாணாவில் கடும் குளிர்: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

DIN

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவில் பெரும்பாலான பகுதிகளில் குளிர்ந்த காலநிலை தொடர்ந்து நீடித்து வருவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாபின் மற்ற இடங்களான அமிர்தசரஸ் 5.5 டிகிரி செல்சியஸாகவும், லூதியானா மற்றும் பாட்டியாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 மற்றும் 5.6 டிகிரியாகவும் உள்ளது. இது இயல்பை  விட 3 டிகிரி செல்சியஸ் குறைவாகும். 

பதிண்டா, ஃபரித்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் முறையே 3, 3.5 மற்றும் 4 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவுகிறது. அண்டை மாநிலமான ஹரியாணாவில், அம்பாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.9 டிகிரி செல்சியஸைப் பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ஹிசாரில் குறைந்தபட்ச வெப்பநிலை 5.9 டிகிரி செல்சியஸ் ஆகும், இது இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாக இருந்தது.

கர்னாலின் குறைந்தபட்ச வெப்பநிலை 4.2 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 4 டிகிரி குறைவாகும், நர்னால் மற்றும் ரோஹ்தக் முறையே 9 மற்றும் 6.8 டிகிரி செல்சியஸ் ஆக இருந்தது.

பஞ்சாப் மற்றும் ஹரியாணாவின் கூட்டுத் தலைநகரான சண்டீகரில் குறைந்தபட்சமாக 7.5 டிகிரி செல்சியஸ், இயல்பை விட 2 டிகிரி குறைவாகப் பதிவாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சவுக்கு சங்கரின் பேட்டியை ஒளிபரப்பிய பெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் காவல்துறையினர் சோதனை

அதானிக்கு விமான நிலையங்களை கொடுக்க எத்தனை ‘டெம்போ’ பணம் வாங்கினீர்கள்? ராகுல்

அவதூறு வழக்கு: எழும்பூர் நீதிமன்றத்தில் இபிஎஸ் ஆஜர்!

நாட்டுக்கு அவர் தேவை.. சந்திரபாபு நாயுடு

வாரணாசியில் பிரதமர் மோடி வேட்புமனு தாக்கல்!

SCROLL FOR NEXT