பஞ்சாப், ஹரியாணாவை வாட்டி வதைக்கும் குளிர் 
இந்தியா

பஞ்சாப், ஹரியாணாவை வாட்டி வதைக்கும் குளிர்!

பஞ்சாப், ஹரியாணாவில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

DIN

பஞ்சாப், ஹரியாணாவில் கடும் குளிர் வாட்டி வதைத்து வருவதால் அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது. 

பஞ்சாப் மற்றும் ஹரியானாவின் கூட்டுத் தலைநகரான சண்டீகரில் குறைந்தபட்சம் 7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது, இது இயல்பை விட இரண்டு டிகிரி குறைவாக பதிவாகியுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

பஞ்சாபின் மற்ற இடங்களில், அமிர்தசரஸ்  4.1 டிகிரி செல்சியஸ் நிலவி வருகிறது. இது இயல்பை விட இரண்டு டிகிரி செல்சியஸ் குறைவாகும். அதே நேரத்தில் லூதியானா மற்றும் பாட்டியாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 6.9 மற்றும் 6.2 டிகிரி செல்சியஸாக பகிதவாகியுள்ளது.

பதான்கோட், பதிண்டா, ஃபரித்கோட் மற்றும் குர்தாஸ்பூரில் 3.9, 6.4, 6, மற்றும் 4 டிகிரி செல்சியஸ் குளிர் காலநிலை நிலவியது. அண்டை மாநிலமான ஹரியாணாவில், அம்பாலாவில் குறைந்தபட்ச வெப்பநிலை 7.6 டிகிரி செல்சியஸ், இயல்பை விட ஒரு டிகிரி குறைவாகும். 

ஹிசாரின் குறைந்தபட்ச வெப்பநிலை 7.5 டிகிரி செல்சியஸ், கர்னால், நர்னோல், ரோஹ்தக் பிவானி மற்றும் சிர்சா ஆகியவை முறையே 5.8, 9, 8.4, 8.3, மற்றும் 8.6 டிகிரி செல்சியஸ் குறைந்தபட்சமாகப் பதிவாகியுள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆஹா கல்யாணம் நடிகைக்கு விரைவில் கல்யாணம்! காதலரைக் கரம்பிடிக்கிறார்!

அமெரிக்க வரி எதிரொலி: ரூபாய் மதிப்பு இதுவரை இல்லாத அளவுக்கு சரிவு!

ஐசிசி மகளிர் உலகக் கோப்பை: பரிசுத் தொகை 4 மடங்கு அதிகம்!

மூளையைத் தின்னும் அமீபா: தமிழக சுகாதாரத்துறை முக்கிய உத்தரவு!

கலாசாரத்தை பெண்கள் காப்பாற்ற தேவையில்லை: பேட் கேர்ள் இயக்குநர்

SCROLL FOR NEXT