இந்தியா

உத்தரகண்டில் அத்தை, மாமாவின் மகள், மகனை திருமணம் செய்யத் தடை!

DIN

உத்தரகண்ட் மாநிலத்தில் அத்தை, மாமனின் மகன் அல்லது மகளை திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் ஒவ்வொரு மதத்திலும் திருமணம், விவாகரத்து, தத்தெடுத்தல், வாரிசுரிமை ஆகியவற்றில் வெவ்வேறு வழிமுறைகள் பின்பற்றப்படுகின்றன.

அதற்குப் பதிலாக அனைத்து மதத்தினரும் ஒரே சட்டத்தைப் பின்பற்ற வழியமைக்கும் ‘பொது சிவில் சட்டத்தை’ நாடு முழுமைக்கும் கொண்டுவர மத்திய பாஜக அரசு முயற்சித்து வருகிறது.

இந்த நிலையில், நாட்டில் முதல் மாநிலமாக உத்தரகண்டில் பொது சிவில் சட்டம் புதன்கிழமை நிறைவேற்றப்பட்டுள்ளது.

இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகளை அமல்படுத்தியுள்ளது.

அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாக்கப்பட்டுள்ளது. தவறுவோா் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, திருமணம் செய்ய தடை விதிக்கப்பட்ட உறவுகள் என்ற பிரிவில், தந்தை சகோதரியின் மகன்மகள் மற்றும் தாய் சகோதரரின் மகன்மகள் என்ற உறவுமுறையும் இடம்பெற்றுள்ளது. 

இந்த தடையை மீறி திருமணம் செய்து கொள்வோர் மீது சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பேருந்து, ரயில், மெட்ரோவுக்கு ஒரே டிக்கெட்: வெளியான அறிவிப்பு!

‘ஏஐ படங்களில் வருவதுபோல..’ புதிய சாட்ஜிபிடி அறிமுகத்தில் சாம் ஆல்ட்மேன்!

கங்கையை ஏமாற்றிய பிரதமர் மோடி: ஜெய்ராம் ரமேஷ் குற்றச்சாட்டு!

தில்லி கேபிடல்ஸ் பேட்டிங்; அணியில் மீண்டும் ரிஷப் பந்த்!

8 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை: வானிலை ஆய்வு மையம் | செய்திகள்: சிலவரிகளில் | 14.05.2024

SCROLL FOR NEXT