இந்தியா

ரயில்வே வேலைக்கு நிலம்: ராப்ரி தேவி, மகள்களுக்கு இடைக்கால ஜாமீன்

DIN


ரயில்வே வேலைக்கு நிலத்தை லஞ்சமாகப் பெற்ற வழக்கில், பிகார் முன்னாள் முதல்வர் ராப்ரி தேவி மற்றும் அவரது இரு மகள்களுக்கு பிப்ரவரி 28ஆம் தேதி வரை இடைக்கா ஜாமீன் வழங்கப்பட்டுள்ளது.

ஜாமீன் கோரி ராப்ரி தேவி, மிஸா பாரதி, ஹேமா யாதவ் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் இடைக்கால ஜாமீன் வழங்கியுள்ளது.

கடந்த 2004-2009ஆம் ஆண்டு வரை மத்தியில் காங்கிரஸ் தலைமையிலான ஆட்சியில், ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தபோது, ரயில்வேயில் குரூப்-டி பணிகளுக்கு, நிலத்தை லஞ்சமாகப் பெற்றுக்கொண்டு பணி வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

லாலு பிரசாத் யாதவ் மற்றும் அவரது குடும்பத்தினர் மீது இது குறித்து சிபிஐ வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இந்த வழக்கில் அண்மையில் அமலாக்கத் துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்திருந்தது. வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு மூவருக்கும் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டிருந்த நிலையில், மூவரும் இடைக்கால ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மூவருக்கும் பிப்ரவரி 28ஆம் தேதி வரை இடைக்கால ஜாமீன் வழங்கி உத்தர்விட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாரணாசி மக்களவைத் தொகுதியில் பிரதமா் மோடி இன்று வேட்புமனு தாக்கல்

இன்று காலை 11-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள்

இன்று யோகம் யாருக்கு?

இன்று இனிய நாள்!

கலை, அறிவியல் படிப்புகளுக்குத் திரும்பும் மாணவா்களின் கவனம்!

SCROLL FOR NEXT