இந்தியா

குட்டையைக் குழப்பி மீன் பிடிக்க முயற்சிக்கும் செயல் இது: திரிபுரா முதல்வர்

DIN

அகர்தலா: வடகிழக்கு மாநிலமான திரிபுராவில் சிலர் கலவரத்தை உண்டாக்க முயற்சிப்பதாக அந்த மாநில முதல்வர் மானிக் சாஹா தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் முதன்மை எதிர்க்கட்சியான திப்ரா மோதாவின் மாணவ அணி, கால வரையற்ற சாலை மற்றும் ரயில் பாதை முற்றுகைக்கு அழைப்பு விடுத்ததைத் தொடர்ந்து முதல்வர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மாநிலத்தின் 24 சதவிகித மக்கள் பயன்படுத்தும் கோக்போரோக் மொழி உள்ளது. இந்த பழங்குடி மொழிக்கு பிரத்யேக லிபி கிடையாது.

ஏற்கெனவே பயன்படுத்தப்பட்டு வந்த ரோமன் முறையை மாற்றி பெங்காலி லிபியில் பொதுத் தேர்வுகளை எழுத வேண்டும் என திரிபுரா மாநில பள்ளி கல்வித் துறை வெளியிட்ட அறிவிப்பு கடும் எதிர்ப்பைச் சந்தித்தது. மாநில பள்ளிக் கல்வித்துறை இரு மொழிகளிலும் எழுதலாம் என அறிவித்தது.

இந்த நிலையில் மார்ச் 1 பொதுத் தேர்வுகள் நடக்கவுள்ள நிலையில் எதிர்க்கட்சியின் மாணவ அமைப்பு போராட்டம் ஜன.12-ல் நடைபெறவுள்ளது.

இது குறித்து திரிபுரா முதல்வர், “சட்டம் மற்றும் ஒழுங்கு குறிப்பிடத்தகுந்த வகையில் முன்னேறி மாநிலத்தின் வளர்ச்சி பாதைக்கு வழிவகுக்கும்போது சிலர் அதற்கு ஊறு விளைவிக்க நினைக்கின்றனர். குளத்தைக் கலக்கி மீன் பிடிக்க முயற்சிக்கும் செயல் இது” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எனது கேள்விகளுக்கு மோடியால் பதிலளிக்க முடியாது: ராகுல்

காவேரிப்பாக்கம் அருகே கன்டெய்னா் லாரி டயா் வெடித்து விபத்து:போக்குவரத்து பாதிப்பு

மேற்கு வங்க ஆளுநா் மீதான பாலியல் குற்றச்சாட்டு: ஊழியா்கள் மூவா் மீது வழக்குப் பதிவு

இசை அறிஞா்கள், சமூகத் தொண்டா்கள் கௌரவிப்பு

தென் மாவட்டங்களில் இன்றும், நாளையும் அதிகனமழை: வானிலை மையம் எச்சரிக்கை

SCROLL FOR NEXT