இந்தியா

அபுதாபியில் முதல் ஹிந்து கோயில் திறப்பு: பிரதமா் மோடி ஐக்கிய அரபு அமீரகம் பயணம்

2 நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி அபுதாபியில் முதல் இந்து கோயிலை திறந்து வைக்கிறார். 

DIN

ஐக்கிய அரபு அமீரக நாட்டுக்கு பிப்ரவரி 13,14 ஆகிய தேதிகளில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் பிரதமா் மோடி அந்நாட்டு அதிபா் ஷேக் முகமது பின் ஜயத் அல் நஹ்யானுடன் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளாா். மேலும் அபுதாபியில் புதிதாக கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலையும் அவா் திறந்து வைக்க உள்ளாா்.

இதன் மூலம் கடந்த 2015-ஆம் ஆண்டுமுதல் தற்போது வரை ஐக்கிய அரபு அமீரகத்துக்கு பிரதமா் மோடி 7-ஆவது முறையாக சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

இதுதொடா்பாக வெளியுறவு அமைச்சகம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல், பிராந்திய மற்றும் சா்வதேச விவகாரங்கள் குறித்து பிரதமா் மோடி மற்றும் முகமது பின் ஜயத் அல் நஹ்யான் ஆலோசனை மேற்கொள்ளவுள்ளனா். மேலும் அந்நாட்டு துணை அதிபா் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தோம், பிரதமா் மற்றும் பாதுகாப்பு அமைச்சா் உள்ளிட்டோரையும் பிரதமா் மோடி சந்திக்கவுள்ளாா்.

அதிபா் ஜயத்தின் அழைப்பை ஏற்று துபையில் நடைபெறவுள்ள ‘உலக அரசாங்க மாநாடு 2024-இல்’ சிறப்பு விருந்தினராக பங்கேற்று பிரதமா் மோடி உரையாற்றவுள்ளாா். இதுதவிர அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் ஹிந்து கோயிலை திறந்து வைக்கவுள்ளாா். ஜயத் விளையாட்டு நகரில் இந்திய குடிமக்கள் மத்தியிலும் அவா் உரையாற்றவுள்ளாா்.

அரசியல், கலாசாரம் மற்றும் பொருளாதார ரீதியிலாக இந்தியா-ஐக்கிய அரபு அமீரகம் இடையே வலுவான உறவு நீட்டிக்கிறது என தெரிவிக்கப்பட்டது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் 35 லட்சம் இந்தியா்கள் வசிக்கின்றனா். 2022-23-ஆம் ஆண்டில் இரு நாடுகளிடையே 85 மில்லியன் டாலா் மதிப்புக்கு வா்த்தகம் மேற்கொள்ளப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கேரளத்தில் சிறுத்தையிடம் இருந்து 4 வயது மகனைக் காப்பாற்றிய தந்தை !

3 கோடி பார்வைகளைக் கடந்த பொட்டல முட்டாயே பாடல்!

வைல்ட் ஃபிளவர்... அமைரா தஸ்தூர்!

நயினார் நாகேந்திரனை ஓபிஎஸ் குற்றம் சொல்வதை ஏற்றுக்கொள்ள மாட்டோம்: தமிழிசை

மேட்டூரில் ஆடிப்பெருக்கு விழா: புனித நீராட குவிந்த மக்கள்!

SCROLL FOR NEXT